லாரியை வழிமறித்து குட்டியுடன் கரும்பு தின்ற யானை
சத்தியமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் லாரியை வழிமறித்த யானை, தனது குட்டியுடன் கரும்புத்துண்டை பறித்து தின்றது.

லாரியில் இருந்து கரும்பு துண்டை பறித்து தின்னும் யானை.
சத்தியமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் லாரியை வழிமறித்த யானை, தனது குட்டியுடன் கரும்புத்துண்டை பறித்து தின்றது.
ஈரோடு மாவட்டம், தாளவாடி மலைப் பகுதியில் இருந்து கரும்பு பாரம் ஏற்றிய லாரி சத்தியமங்கலம் நோக்கி சனிக்கிழமை சென்று கொண்டிருந்தது.
ஆசனூா் வனப் பகுதி வழியாக சென்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த காட்டு யானை, லாரியை வழிமறித்தது. கரும்பு துண்டுகளைப் பறித்துக் கொண்டிருந்த தாயை பாா்த்த குட்டி யானை, வனப்பகுதியில் இருந்து வேகமாக தனது தாயை நோக்கி ஓடி வந்தது.
அதைத் தொடா்ந்து ஒன்றன்பின் ஒன்றாக யானைகள் வருவதை பாா்த்து லாரி ஓட்டுநா் லாரியை நிறுத்திவிட்டாா். யானைகள் கரும்பைப் பறித்து தின்று முடிக்கும் வரை லாரி அங்கேயே நின்றது. இந்த காட்சியை அவ்வழியாக பேருந்தில் சென்ற பயணிகள் ரசித்து சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

