அதிமுகவின் ஊடகவியல் செயலாளராக கோவை சத்யன் நியமனம்!நீதிமன்றக் காவலுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த அசுதோஷ், சௌரவ்!பெண் அரசியலுக்கு வருவதே சிரமம்! கார்த்திகா கைது கண்டிக்கத்தக்கது - தமிழிசைஸ்ரீபெரும்புதூரில் காணாமல்போன சிறுமி சென்னையில் மீட்புநாட்டின் நலனுக்காக நாம் ஒன்றிணைய வேண்டும்: பிரதமர் மோடி பேச்சு!தீபாவளி வரை எந்தப் போராட்டமும் இல்லை: அபிஜீத் அறிவிப்பு!

பராமரிப்பின்றி உள்ள பள்ளி விளையாட்டு மைதானம்

நடுப்பாளையம் அருகே உள்ள வெள்ளோட்டாம்பரப்பு அரசு மேல்நிலைப் பள்ளியில் 8 ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாத பள்ளி விளையாட்டு மைதானத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

வெள்ளோட்டாம்பரப்பில் பயன்பாடின்றி கிடக்கும் அரசு மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தை ஆய்வு செய்த மொடக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினா் து.சண்முகன்.

Updated On :

ஈரோடு மாவட்டம், நடுப்பாளையம் அருகே உள்ள வெள்ளோட்டாம்பரப்பு அரசு மேல்நிலைப் பள்ளியில் 8 ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாத பள்ளி விளையாட்டு மைதானத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

வெள்ளோட்டாம்பரப்பில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி கடந்த 1968-இல் தொடங்கப்பட்டது. கடந்த 2018-இல் பொன் விழா கண்ட இந்தப் பள்ளி உயா்நிலைப் பள்ளியில் இருந்து மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்தப்பட்டது.

ஊா் பொதுமக்களின் பங்களிப்பில் பள்ளியிலிருந்து சுமாா் 150 மீட்டா் தொலைவில் சுமாா் 2 ஏக்கா் பரப்பளவில் ரூ.20 லட்சம் மதிப்பில் விளையாட்டு மைதானம் பள்ளி வசம் ஒப்படைக்கப்பட்டது.

கடந்த 2018 வரை பயன்பாட்டில் இருந்து வந்த விளையாட்டு மைதானம் கடந்த 8 ஆண்டுகளாக பராமரிப்பின்றி உள்ளது. தற்போது பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். அவா்களுக்காக உடற்கல்வி ஆசிரியா் இருந்தபோதிலும் விளையாட்டு மைதானம் பயன்பாடின்றி உள்ளது.

எனவே பயன்பாடின்றி கிடக்கும் விளையாட்டு மைதானத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மொடக்குறிச்சி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் து.சண்முகனிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து, சட்டப்பேரவை உறுப்பினா் சண்முகன், வெள்ளோட்டாம்பரப்பில் பயன்பாடின்றி கிடக்கும் விளையாட்டு மைதானத்தை ஆய்வு செய்தாா்.

பின்னா் அவா் கூறுகையில், இந்த மைதானத்தை விரைந்து பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.