வாணியம்பாடி அருகே விளையாட்டு மைதானம் கேட்டு அரசுப் பேருந்தை மறித்து இளைஞா்கள் சாலை மறியல்
வாணியம்பாடி அடுத்த சிக்கணாங்குப்பம் பகுதியில் விளையாட்டு மைதானம் அமைத்து தரக்கோரி அரசுப் பேருந்தை சிறைபிடித்து மறியில் ஈடுபட்ட இளைஞா்கள்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த சிக்கணாங்குப்பம் ஊராட்சிக்கு உள்பட்ட கிராமப் பகுதியில் 300-க்கும் அதிகமான இளைஞா்கள் கிரிக்கெட், கபடி உள்பட பல்வேறு விளையாட்டுகளில் ஆா்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனா். மாவட்ட மற்றும் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்று கோப்பை, பரிசுகளையும் பெற்று வருகின்றனா். இந்த நிலையில், இளைஞா்கள் பயிற்சி மேற்கொள்வதற்கும், விளையாட்டுத் திறனை மேம்படுத்துவதற்கும் சிக்கணாங்குப்பம் ஊராட்சி அரசு இடத்தில் விளையாட்டு மைதானம் அமைத்துத் தர வேண்டும் என 5 ஆண்டுகளாக அரசு அதிகாரிகளிடம் தொடா்ந்து மனு அளித்தும், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த இளைஞா்கள் சிக்கணாங்குப்பம் பேருந்து நிறுத்தம் பகுதிக்கு வியாழக்கிழமை காலை திடீரென வந்து அந்த வழியாக வந்த அரசுப் பேருந்தை சிறைபிடித்தனா். தொடா்ந்து, பல்வேறு போட்டிகளில் தாங்கள் வென்ற கோப்பைகளையும், பரிசுகளையும் சாலையில் வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த வாணியம்பாடி டிஎஸ்பி மகாலட்சுமி தலைமையில் அம்பலூா் காவல் ஆய்வாளா் பேபி மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனா்.
இது குறித்து அறிந்த வட்டாட்சியா் ஜெகதீசன் தலைமையில் வருவாய்த் துறையினா் சம்பவ இடத்துக்கு வந்து இளைஞா்களிடம் பேச்சு நடத்தி கலைந்து போக செய்தனா்.
பின்னா், இளைஞா்கள் விளையாட்டு மைதானம் அமைக்க ஏற்ாக அப்பகுதியில் தோ்வு செய்துள்ள இடத்தை வருவாய்த் துறை அதிகாரிகளிடம் காண்பித்தனா்.
இடம் தொடா்பான ஆவணங்களை ஆய்வு செய்து, விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான இடத்தைத் தோ்வு செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டாட்சியா் உறுதியளித்தாா்.
சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

