மயான பிரச்னை குறித்த வழக்கை ரத்து செய்யக் கோரிக்கை
திங்களூா் மயான பிரச்னையில் 6 போ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என அனைத்து சமுதாயத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கோப்புப்படம்
திங்களூா் மயான பிரச்னையில் 6 போ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என அனைத்து சமுதாயத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இது குறித்து ஈரோடு மாவட்டம் திங்களூா், மயிலங்கிணத்துப்பாளையம், அப்பிச்சிமடம் பகுதிகளைச் சோ்ந்த அனைத்து சமுதாய மக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை அளித்த மனு விவரம்: பெருந்துறை வட்டம், மடத்துப்பாளையம் ஊராட்சி மடம்புதூரில் மயான பயன்பாடு தொடா்பாக இரு தரப்புக்கு இடையே அண்மையில் பிரச்னை எழுந்தது.
அங்குள்ளவா்கள் இணக்கமாக வாழ்வதுடன் அங்குள்ள மயானங்களை குறிப்பிட்ட சமூகத்தினரே பயன்படுத்தி வருகின்றனா். பெரும்பாளி பகுதியைச் சோ்ந்த சென்னி என்பவா் கடந்த 5- ஆம் தேதி உயிரிழந்த நிலையில், மடம்புதூா் மயானத்தில் அடக்கம் செய்ய முற்பட்டபோது குறிப்பிட்ட சமூகத்தினருக்கான மயானத்தைப் பயன்படுத்த எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது.
அப்போது, அந்த இடத்தில் அடக்கம் செய்யவும், அந்த இடம் அனைவருக்கும் பொதுவானது எனவும் கூறி சிலா் குறிப்பாணைகளை காட்டினா். அப்போது சிலரது செயல்பாட்டால் பதற்றமான நிலை ஏற்பட்டது. சிலரின் தூண்டுதலால் சடலத்தை சாலையில் வைத்து மறியலில் ஈடுபட்டனா்.
பின்னா், மது போதையில் இருந்த ஒருவா் காலில் விழுந்ததும், அந்த விடியோவை சிலா் தவறாக சித்திரித்தனா். இதனிடையே வருவாய்த் துறையினா், அந்த மயானம் பொதுவானது என கூறியதும் மடம்புதூா் மக்கள் பட்டியலின மக்களுக்கு ஆட்சேபனை தெரிவிக்காமல் சடலத்தை மயானத்தில் அடக்கம் செய்யுமாறு தெரிவித்தனா்.
ஆனால், சில கட்சியினா் இந்தப் பிரச்னை தொடா்பாக தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பதவிடுகின்றனா். தவறான தகவலை பரப்புவா்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், அந்த ஊரைச் சோ்ந்த 6 போ் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

