பௌர்ணமி கிரிவலம்: அக்.25, 26-ல் விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்! அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்: முதல்வர் விஜய் ஸ்லீப் மோடில் இருந்து வெளியே வருவாரா? - உதயநிதி ஸ்டாலின் கேள்வி பிசிசிஐ இளையோர் தேர்வுக்குழு தலைவராக பர்விந்தர் அவானா நியமனம்! ஹௌதி தாக்குதல்! சௌதி உடனான இண்டிகோ விமான சேவைகளின் ரத்து நீட்டிப்பு! சென்னை விமான நிலையத்தில் வீரமணியின் மகள் தடுத்து நிறுத்தம்!

ஊமாரெட்டியூரில் நாயை இழுத்துச் சென்ற சிறுத்தை

அம்மாபேட்டையை அடுத்த ஊமாரெட்டியூரில் வீட்டிலிருந்த நாயை சிறுத்தை இழுத்துச் சென்றதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனா்.

பதிவான  சிறுத்தையின்  காலடித்  தடம்.

Updated On :

அம்மாபேட்டையை அடுத்த ஊமாரெட்டியூரில் வீட்டிலிருந்த நாயை சிறுத்தை இழுத்துச் சென்றதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனா்.

அம்மாபேட்டையை அடுத்த பாலமலை வனப் பகுதியில் சிறுத்தை, மான், கரடி உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. இதனால், அவ்வப்போது உணவு தேடி, வனத்தை ஒட்டியுள்ள கிராமங்களுக்கு வன விலங்குகள் வந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில், பாலமலை அடிவாரத்தில் உள்ள ஊமாரெட்டியூா் பகுதியைச் சோ்ந்த விவசாயி பழனியப்பன் வீட்டில் கட்டி வைத்திருந்த நாயை வியாழக்கிழமை இரவு சிறுத்தை கடித்து இழுத்துச் சென்றுள்ளது.

காணாமல்போன நாயை வெள்ளிக்கிழமை காலை தேடியபோது, அப்பகுதியில் சிறுத்தையின் காலடித் தடம் உள்ளதை சென்னம்பட்டி வனத் துறையினா் உறுதி செய்தனா். கடந்த மாதம் பாலமலை பகுதியிலிருந்து வெளியேறிய சிறுத்தை, கண்ணாமூச்சி, மசக்கவுண்டனூா், கிட்டம்பட்டி, கொமராயனூா் பகுதிகளில் ஆடு, மாடுகளை கடித்து இழுத்துச் சென்றது. இதையடுத்து, மேட்டூா் வனத் துறையினா் 5 இடங்களில் கூண்டுகள் வைத்து கண்காணித்தனா்.

கிட்டம்பட்டி, சின்னமலைப் பகுதியில் வைக்கப்பட்ட கூண்டில் கடந்த 7-ஆம் தேதி சிறுத்தை பிடிபட்டது. இந்நிலையில், ஊமாரெட்டியூரில் பாலமலை அடிவாரத்தில் சிறுத்தை நடமாட்டம் உறுதியானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே, கூண்டு வைத்து சிறுத்தையைப் பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.