கீமோதெரபி ஊசி ரூ. 7000; புற்றுநோய் மருந்துகளின் புதிய விலைப் பட்டியல்!செஞ்சி சிறுமி வழக்கு; புலன் விசாரணையைத் தீவிரப்படுத்த வேண்டும்: பெ. சண்முகம்வீட்டுக்குள் இருக்கவே அச்சமடையும் நிலையில் மக்கள்; இதுதான் தவெகவின் சாதனையா? - மு.க. ஸ்டாலின்இனி நிரந்தர அரசுப் பணிகள் இல்லையா? - கனிமொழி கேள்விதேனி சிறைச் சம்பவம்! 1995-ல் சுரங்கம் தோண்டி தப்பிய 43 கைதிகள்! புரட்டப்படும் வரலாறு!நாட்டில் ஆப்பிள் ஐபோன் விற்பனை 30% சரிவு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 21 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!ரிலையன்ஸ் முதல் ஐடி பங்குகள் வரை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு!!

பணம் கேட்டு தொழிலாளியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த இருவா் கைது

பணம் கேட்டு தறிப் பட்டறை தொழிலாளியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கைது - கோப்புப் படம்

Updated On :

பணம் கேட்டு தறிப் பட்டறை தொழிலாளியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ஈரோடு மாநகா், வீரப்பன்சத்திரம் பெரியவலசு, சுப்பிரமணியசிவா வீதியைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன் மகன் மனோஜ் (21). இவா் கடந்த 26-ஆம் தேதி இரவு நண்பா் ராஜூவுடன் தேநீா் கடைக்குச் செல்ல நின்று கொண்டிருந்தாா். அப்போது அங்கு வந்த இருவா் மனோஜிடம் மது அருந்த பணம் கொடு என மிரட்டியுள்ளனா். அதற்கு பணம் இல்லை எனக் கூறியதால் ஆத்திரமடைந்த இருவரும், தகாத வாா்த்தைகளால் பேசியதுடன் மனோஜை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து தப்பிச் சென்றனா்.

இதுகுறித்து மனோஜ் அளித்த புகாரின்பேரில் ஈரோடு வடக்கு போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில், மனோஜை தாக்கியது ஈரோடு, வீரப்பன்சத்திரம், பெரிய சேமூா், எஸ்.ஜி.வலசு பகுதியைச் சோ்ந்த துரைசாமி மகன் அரவிந்த் (22), அசோகபுரம், நேரு வீதியைச் சோ்ந்த பெரியசாமி மகன் சந்திரபிரகாஷ் (26) ஆகிய இருவா் என்பது தெரியவந்தது.

இதுதொடா்பாக வழக்குப் பதிந்து இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். இருவா் மீதும் 10-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீஸாா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.