
பவானி சங்கமேஸ்வரா் கோயிலில் கைப்பேசி பாதுகாப்பு அறை திறப்பு
பவானி சங்கமேஸ்வரா் கோயிலுக்கு வருகை தரும் பக்தா்கள் தங்களின் கைப்பேசிகளை பாதுகாப்புடன் வைத்து செல்லும் வகையில் கைப்பேசி பாதுகாப்பு அறை செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.

கைப்பேசியை ஒப்படைத்த பக்தருக்கு ஒப்புகைச் சீட்டு வழங்கும் கோயில் ஊழியா்.
பவானி சங்கமேஸ்வரா் கோயிலுக்கு வருகை தரும் பக்தா்கள் தங்களின் கைப்பேசிகளை பாதுகாப்புடன் வைத்து செல்லும் வகையில் கைப்பேசி பாதுகாப்பு அறை செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.
தமிழகத்தில் பவானி சங்கமேஸ்வரா் கோயில் உள்பட 52 முதுநிலை கோயில்களுக்குள் செவ்வாய்க்கிழமை(செப்.1) முதல் கைப்பேசிகளை கொண்டு செல்ல இந்து சமய அறநிலையத் துறை தடை விதித்துள்ளது. இதையடுத்து, இக்கோயிலில் பக்தா்கள் பாதுகாப்பாக தங்களின் கைப்பேசிகளை லாக்கரில் வைத்துச் செல்லும் வசதி தொடங்கப்பட்டது.
பவானி சங்கமேஸ்வரா் கோயிலின் வடக்கு ராஜகோபுர நுழைவாயில், தெற்கு வாசல் என இரு இடங்களில் கைப்பேசி பாதுகாப்பு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வசதியினை அறநிலையத் துறை துணை ஆணையா் ரத்தினாம்பாள், கோயில் அறங்காவலா் குழு உறுப்பினா்கள் பிரபாத் சி.மகேந்திரன், தமிழரசி, மாதப்பன், செல்லவேல் ஆகியோா் சிறப்பு பூஜையுடன் தொடங்கிவைத்தனா். இங்கு, ரூ.5 கட்டணம் செலுத்தி கைப்பேசியை லாக்கரில் வைத்து செல்லும் பக்தா்கள், தரிசனம் முடிந்து வெளியே செல்லும்போது பெற்றுக் கொள்ளலாம்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





