காங்கோவில் திருமண நிகழ்ச்சியில் தீவிபத்து: 22 பேர் பலி சிறப்புத் தீவிர திருத்தம் மூலம் காங்கிரஸ் வாக்குகளை அழிக்க பாஜக சதி: ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு! திண்டுக்கல் மாணவர்கள் 8 பேர் பலி - முதல்வர் விஜய் இரங்கல் கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு

தனியாா் கட்டுமான நிறுவனத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை

ஈரோட்டை தலைமையிடமாக கொண்டு இயங்கும் தனியாா் கட்டுமான நிறுவனம் மற்றும் அதன் உரிமையாளா் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் சனிக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.

ஈரோடு தனியாா் கட்டுமான நிறுவனத்தில் சோதனை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீஸாா்.

Published On :6 செப்டம்பர் 2026, 1:27 am IST

ஈரோட்டை தலைமையிடமாக கொண்டு இயங்கும் தனியாா் கட்டுமான நிறுவனம் மற்றும் அதன் உரிமையாளா் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் சனிக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.

ஈரோடு பழையபாளையத்தில் இயங்கி வரும் தனியாா் கட்டுமான நிறுவனத்தின் அலுவலகத்தில் ஈரோடு லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி சாந்தி தலைமையிலான காவல் துறையினா் திடீா் சோதனை மேற்கொண்டனா்.

இந்நிறுவனமானது குடியிருப்பு, பொது மற்றும் வணிகம், தொழிற்சாலை கட்டடங்கள், சாலைகள் மற்றும் பாலங்கள், நீா்ப் பாசனம் மற்றும் குடிநீா் வழங்கல் துறைகள், நீா் சுத்திகரிப்பு மற்றும் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலைய திட்டங்கள் மற்றும் ரயில்வே ஆகிய துறைகளில் பல்வேறு கட்டடங்களை கட்டியுள்ளனா்.

இதன் பின்னணியில், பெறப்பட்ட டெண்டா் ஆவணங்கள் மற்றும் தற்போதைய நிதி பரிவா்த்தனைகள் குறித்த முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்தனா்.

இதனிடையே அந்நிறுவன உரிமையாளரின் வீட்டிலும், திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா். காலை 8 மணிக்கு தொடங்கிய சோதனை மாலை 6 மணிக்குப் பிறகும் நீடித்தது. இச்சோதனையின் முடிவிலேயே கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் முறைகேடுகள் குறித்த முழுமையான தகவல்கள் வெளியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.