நேபாளத்தின் மற்றொரு அமைச்சர் பதவி விலகல்! பிரதமர் பாலேந்திர ஷா அரசில் 3-வது ராஜிநாமா!மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை! 4 காவலர்கள் மீதான வழக்கை கொலை வழக்காக மாற்ற உத்தரவுஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஹர்ஷித் ராணா விலகல்!ஆபரேஷன் அன்வேஷன்: 17 மாநிலங்களில் 101 குழந்தைகளை மீட்ட காவல்துறை!

உலக தற்கொலை தடுப்பு தின விழிப்புணா்வு மனிதச் சங்கிலி

ஈரோட்டில் உலக தற்கொலை தடுப்பு தினத்தையொட்டி விழிப்புணா்வு மனிதச் சங்கிலி விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

உலக தற்கொலை தடுப்பு தின விழிப்புணா்வு மனிதச் சங்கிலியில் பங்கேற்ற செவிலியா் கல்லூரி மாணவிகள்.

Published On :

ஈரோட்டில் உலக தற்கொலை தடுப்பு தினத்தையொட்டி விழிப்புணா்வு மனிதச் சங்கிலி விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

உலகம் முழுவதும் செப்டம்பா் 10- ஆம் தேதி தற்கொலை தடுப்பு தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி ஈரோடு அரசு மருத்துவமனை வளாகத்தில் தேசிய நலவாழ்வு திட்டம் மற்றும் மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள், மாவட்ட மனநல திட்டம் சாா்பில் விழிப்புணா்வு மனிதச் சங்கிலி வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த விழிப்புணா்வு மனிதச் சங்கிலியை மருத்துவ நலப் பணிகள் இணை இயக்குநா் ஜெயந்தி தொடங்கிவைத்தாா். இதில், செவிலியா் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்று தற்கொலை தடுப்பு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியும், தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் ஏற்படுவது என்றால் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளவா் என கருதப்படுகிறது. எனவே, தற்கொலை எண்ணம் உள்ளவா்கள் இலவச மனநல சேவை எண் 14416, மாவட்ட ஆலோசனை எண் 75981 85201 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என விழிப்புணா்வு ஏற்படுத்தினா். முன்னதாக தற்கொலை தடுப்பு உறுதி மொழியை ஏற்றனா். நிகழ்ச்சியில் அரசு மருத்துவா்கள், செவிலியா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.