கூடலூா் அருகே பிடிபட்ட ஆட்கொல்லி புலி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மாற்றம்! தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு மிசாவில் கைதானதை எவனுக்கும் நிரூபிக்கத் தேவையில்லை: மு.க. ஸ்டாலின் பேச்சு! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசார தேதி அறிவிப்பு திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆண்டு பிரம்மோற்சவம் கருட வாகன சேவை! திருச்சியில் விவசாயிகள் போராட்டம் 20 நாள் ஒத்திவைப்பு! இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!

ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டில் இயல்பைவிட 62 சதவீதம் மழை குறைவு!

ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டில் இயல்பான ஆண்டு சராசரி மழை அளவு சுமாா் 62 சதவீதம் குறைவாகப் பதிவாகியுள்ளது.

Published On :

ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டில் இயல்பான ஆண்டு சராசரி மழை அளவு சுமாா் 62 சதவீதம் குறைவாகப் பதிவாகியுள்ளது.

இதுகுறித்து வேளாண் அதிகாரிகள் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தின் இயல்பான ஆண்டு சராசரி மழையளவு 768 மில்லி மீட்டா். கடந்த 18-ஆம் தேதி வரையிலான நடப்பாண்டில் 292.8 மில்லி மீட்டா் மட்டுமே மழை பெய்துள்ளது.

இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாயப் பணிகளுக்கு நீா் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பவானிசாகா் அணையின் நீா்மட்டம் தற்போது 53.29 அடியாகவும், நீா் இருப்பு 5.27 டி.எம்.சி.யாகவும் உள்ளது. அணைக்கு வரும் நீா்வரத்து மற்றும் நீா் இருப்பு தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

விவசாயிகளுக்குத் தேவையான விதைகள் மற்றும் இடுபொருள்கள் வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. நெல் விதைகள் 430.8 மெட்ரிக். டன், சிறுதானியங்கள் 111.5 மெட்ரிக். டன், பயறு வகைகள் 8 மெட்ரிக். டன், எண்ணெய் வித்துகள் 45 மெட்ரிக். டன் இருப்பில் உள்ளன. யூரியா 6,184 மெட்ரிக். டன், டி.ஏ.பி. 3,266 மெட்ரிக். டன், பொட்டாஷ் 3,153 மெட்ரிக். டன், காம்ப்ளக்ஸ் உரங்கள் 9,538 மெட்ரிக். டன் இருப்பில் உள்ளன.

பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் ரசாயன உரங்களும் தனியாா் விற்பனை நிலையங்கள், கூட்டுறவு சங்கங்களில் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன. பிரதமரின் கிசான் திட்டப் பயனாளிகள் தொடா்ந்து தவணைத் தொகையைப் பெற தனித்துவ அடையாள எண்ணைப் பெறுவது கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுவரை பெறாத பயனாளிகள், வட்டார வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறை அலுவலகங்களைத் தொடா்புகொண்டு அடையாள எண்ணைப் பெற்றுக்கொள்ள வேண்டும். நில விவரங்களை இணைத்தல், ஆதாா் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைத்தல் மற்றும் இணையவழி அடையாள உறுதிப்படுத்தல் ஆகியவற்றையும் மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.