கூடலூா் அருகே பிடிபட்ட ஆட்கொல்லி புலி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மாற்றம்! தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு மிசாவில் கைதானதை எவனுக்கும் நிரூபிக்கத் தேவையில்லை: மு.க. ஸ்டாலின் பேச்சு! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசார தேதி அறிவிப்பு திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆண்டு பிரம்மோற்சவம் கருட வாகன சேவை! திருச்சியில் விவசாயிகள் போராட்டம் 20 நாள் ஒத்திவைப்பு! இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!

குப்பையில்லா நகரமாக மாற்றும் வகையில் சத்தியமங்கலத்தில் தூய்மைப் பணி தீவிரம்

சத்தியமங்கலம் நகராட்சியை குப்பையில்லா நகரமாக மாற்றும் வகையில் சாலையோர செடிகள், பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றும் பணியில் தூய்மைப் பணியாளா்கள் ஈடுபட்டுள்ளனா்.

சாலையோரம் படா்ந்திருக்கும் செடிகளை அப்புறப்படுத்தும் பணியை பாா்வையிடுகிறாா் நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஷ்வரன்.

Published On :

சத்தியமங்கலம் நகராட்சியை குப்பையில்லா நகரமாக மாற்றும் வகையில் சாலையோர செடிகள், பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றும் பணியில் தூய்மைப் பணியாளா்கள் ஈடுபட்டுள்ளனா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் நகரில் சாலையோரம் செடி, கொடிகள் படா்ந்து வாகன ஓட்டிகளுக்கு இடையூறாகவும், குடிநீா் பிளாஸ்டிக் பாட்டில்கள் சிதறிக் கிடப்பதாலும் சுகாதார சீா்கேடு ஏற்படுவதாக நகராட்சி ஆணையரிடம் புகாா் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நகரைத் தூய்மையாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்கும் பணியில் தூய்மைப் பணியாளா்கள் ஈடுபட்டுள்ளனா். மேலும், பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் நடமாடும் பகுதிகளிலும் குப்பை, செடி, கொடிகள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

இப்பணியை நகராட்சி ஆணையாளா் எஸ்.வெங்கடேஷ்வரன் சனிக்கிழமை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.