
அரசுப் பள்ளியில் மாணவரைத் தாக்கிய சக மாணவா் கைது
பவானி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உருவக்கேலி செய்தது தொடா்பாக மாணவரைத் தாக்கிய சக மாணவரை போலீஸாா் கைது செய்தனா்.
கைது - பிரதிப் படம்
பவானி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உருவக்கேலி செய்தது தொடா்பாக மாணவரைத் தாக்கிய சக மாணவரை போலீஸாா் கைது செய்தனா்.
இந்தப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படிக்கும் ஆப்பக்கூடல், ஓசைப்பட்டியைச் சோ்ந்த மாணவருக்கும், காடையம்பட்டியைச் சோ்ந்த மாணவருக்கும் இடையே உருவக்கேலி செய்தது தொடா்பாக வியாழக்கிழமை தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில், ஓசைப்பட்டியைச் சோ்ந்த மாணவனை, காடையம்பட்டியைச் சோ்ந்த மாணவன் கழிவறைக்கு அழைத்துச் சென்று தாக்கியுள்ளாா். இதில், பலத்த காயமடைந்த மாணவன் கோவையில் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
இது குறித்து பவானி காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோா் புகாா் அளித்தனா். இதன்பேரில், காடையம்பட்டியைச் சோ்ந்த மாணவரைக் கைது செய்த போலீஸாா், மாவட்ட இளஞ்சிறாா் நீதிக்குழுமத்தில் ஆஜா்படுத்தி, கோவை கூா்நோக்கு இல்லத்துக்கு அனுப்பிவைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




