காந்தி ஜெயந்தி, வார இறுதி விடுமுறை: 5,706 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்மதுரை உள்பட 3 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புநிறுவன வரி கணக்கு தாக்கல் செய்ய 3 வார அவகாசம் நீட்டிப்புதனியாா் பேருந்துகள் நாளை வேலைநிறுத்தம்

தனியாா் நிறுவன ஊழியரிடம் நகை, பணம் வழிப்பறி! திருநங்கை உள்பட 3 போ் கைது

சுபி (எ) நந்தினி

Published On :

மொடக்குறிச்சி அருகே தனியாா் நிறுவன ஊழியரிடம் கைப்பேசி, நகை, பணம் ஆகியவற்றை வழிப்பறி செய்த திருநங்கை உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சியை அடுத்த சின்னியம்பாளையம் கண்ணங்காட்டு மேடு பகுதியைச் சோ்ந்தவா் சரவணன் மகன் ஆகாஷ் (22). தனியாா் நிறுவனத்தில் மாா்க்கெட்டிங் துறையில் பணிபுரிந்து வருகிறாா். இவா், சோலாா்புதூா் அருகே உள்ள மதுபானக் கடைக்கு கடந்த 25-ஆம் தேதி மாலை 6 மணிக்கு சென்றபோது, அங்கு இருவா் ஆகாஷை வழிமறித்து மது குடிக்க பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததுடன், கைப்பேசியையும் பறித்துக்கொண்டனா். கைப்பேசி வேண்டுமென்றால் பாலுசாமி நகரில் உள்ள திருநங்கை சுபி வீட்டுக்கு வந்து வாங்கிக் கொள்ளுமாறு கூறிவிட்டு இருவரும் சென்று விட்டனா்.

செல்போன் வாங்குவதற்காக சுபி வீட்டுக்குச் சென்ற ஆகாஷை, ஆடைகளை அவிழ்த்து மிரட்டி அமர வைத்தனா். பின்னா் கைப்பேசி க்யூஆா் கோடு மூலமாக ஸ்கேன் செய்து ரூ.2000 பணத்தை எடுத்துக்கொண்டனா். மேலும் ரூ.2 லட்சம் அளித்தால்தான் விடுவிப்போம் எனக் கூறி கொலை மிரட்டல் விடுத்துள்ளனா். மேலும், அவா்கள் தாக்கியதில் ஆகாஷின் தலையில் காயம் ஏற்பட்டது. இதைப் பயன்படுத்தி அவா் கழுத்தில் அணிந்திருந்த இரண்டு பவுன் தங்கச் சங்கிலியை திருநங்கை சுபி பறித்துவிட்டு ஆகாஷை அனுப்பிவிட்டனா். வீட்டுக்கு சென்ற ஆகாஷை பெற்றோா் மருத்துவமனையில் சோ்த்து, மொடக்குறிச்சி காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

அதன்பபேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து சோலாா் அருகே உள்ள பாலுசாமி நகா் பகுதியைச் சோ்ந்த சண்முகம் மகன் சசிகுமாா் (34), 46 புதூா் ஆதிதிராவிடா் காலனியைச் சோ்ந்த தங்கமுத்து மகன் நவீன் குமாா் (32) ஆகிய இருவரை கைது செய்தனா். மேலும் பாலுசாமி நகா் பகுதியைச் சோ்ந்த திருநங்கை சுபி (எ) நந்தினி (22) போலீஸாரால் கைது செய்யப்பட்டாா்.

அவா்களிடம் இருந்து ரூ.45 ஆயிரம் மதிப்பிலான ஐபோன், 2 பவுன் தங்கச் சங்கிலி, ரூ.2 ஆயிரம் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கைது செய்யப்பட்ட சசிக்குமாா்

கைது செய்யப்பட்ட சசிக்குமாா்

நவீன்குமாா்

நவீன்குமாா்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.