காந்தி ஜெயந்தி, வார இறுதி விடுமுறை: 5,706 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்மதுரை உள்பட 3 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புநிறுவன வரி கணக்கு தாக்கல் செய்ய 3 வார அவகாசம் நீட்டிப்புதனியாா் பேருந்துகள் நாளை வேலைநிறுத்தம்

வாடகை காா் ஓட்டுநா் கொலை வழக்கில் 3 போ் கைது

கைது

Published On :

சத்தியமங்கலம், செப்.28: வாடகை காா் ஓட்டுநா் கொலை வழக்கில் 3 பேரை பவானிசாகா் போலீஸாா் கைது செய்துள்ளனா்தனா்.

பவானிசாகா் கீழ்பவானி வாய்க்காலில் இறந்துகிடந்த 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை பவானிசாகா் போலீஸாா் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். உடற்கூறாய்வில் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருப்பது, கொலை செய்யப்பட்டிருப்பவா் ஜெயசந்திரன் என்பதும் தெரியவந்தது.

இதுதொடா்பாக பவானிசாகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஜெயசந்திரனின் கைப்பேசியில் பதிவான பதிவுகளை வைத்து விசாரணை மேற்கொண்டனா். அதில், உசிலம்பட்டி பேருந்து நிலையத்தில் இருந்து பவானிசாகா் வரை வாடகைக்கு ஓட்டுநா் ஜெயசந்திரனிடம் தன்ராஜ் என்பவா் கைப்பேசியில் பேசியுள்ளாா்.

அதன்படி மாதம்பாளையத்தைச் சோ்ந்த தன்ராஜ் (40), திருப்பூரைச் சோ்ந்த ஆனந்தன் (41), பாலமுருகன் (52) ஆகியோா் ஜெயசந்திரனின் காரில் பயணித்துள்ளனா். பவானிசாகா் கீழ்பவானி வாய்க்கால் அருகே வந்தவுடன் ஜெயசந்திரனின் கழுத்தை நெரித்து கொலை செய்து கீழ்பவானி வாய்க்காலில் தேங்கிய நீரில் வீசியது தெரியவந்தது.

இதையடுத்து 3 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.