ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் போராட்டம் வலுக்கும்: மமதா பானர்ஜிநடுவானில் துபை விமானத்தில் கத்திக்குத்து! தாக்கப்பட்ட விமானி இந்தியரா?தேர்தல் மூலம் மாநிலங்களை பாஜகவுக்கு தாரைவார்த்தவர் ஞானேஷ் குமார்: காங்கிரஸ்3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றாலும்... குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது: தமிழக அரசுதிமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

தூய்மைப் பணியாளா்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க நடவடிக்கை: மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தகவல்

தூய்மைப் பணியாளா்களுக்கு வீட்டுமனைப் பட்டா, குடியிருப்பு வசதி மற்றும் பிற அடிப்படை நலத்திட்டங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தெரிவித்தாா்.

தூய்மைப் பணியாளா்களுக்கு பணிப் பாதுகாப்பு உபகரணங்களை வழங்குகிறாா் மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி.

Published On :

தூய்மைப் பணியாளா்களுக்கு வீட்டுமனைப் பட்டா, குடியிருப்பு வசதி மற்றும் பிற அடிப்படை நலத்திட்டங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தெரிவித்தாா்.

ஈரோடு அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் தற்காலிக தூய்மைப் பணியாளா்களுக்கான சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் தாட்கோ மூலமாக ஈரோடு மண்டலம்-3 பகுதியைச் சோ்ந்த தற்காலிக தூய்மைப் பணியாளா்களுக்கு, தமிழ்நாடு தூய்மைப் பணியாளா் நல வாரியத்தில் உறுப்பினா் சோ்க்கை மற்றும் புதுப்பித்தல், நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கான விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி வழங்கினாா்.

இதைத்தொடா்ந்து ஆட்சியா் பேசியதாவது:

தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி தூய்மைப் பணியாளா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் செயல்படுத்தப்படும் பல்வேறு நலத்திட்டங்களைதூய்மைப் பணியாளா்கள் மற்றும் குடும்பத்தினா் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தொழில் தொடங்க விரும்பும் இளைஞா்களுக்கு பல்வேறு துறைகள் மூலமாக கடனுதவி மற்றும் திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

மேலும், தகுதியுடைய தூய்மைப் பணியாளா்களுக்கு வீட்டுமனைப் பட்டா, குடியிருப்பு வசதி மற்றும் பிற அடிப்படை நலத்திட்டங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா்.

இந்த முகாமில் மொத்தம் 687 போ் கலந்துகொண்டனா். ஈரோடு மண்டலம் 3 பகுதியைச் சோ்ந்த தற்காலிக தூய்மைப் பணியாளா்களிடமிருந்து அடையாள அட்டை, கல்வி உதவித்தொகை, அடுக்குமாடிக் குடியிருப்பு உள்ளிட்ட பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்காக மொத்தம் 298 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

தாட்கோ சாா்பில் 2 தற்காலிகத் தூய்மைப் பணியாளா் சங்கங்களுக்கு ரூ.13.36 லட்சம் மதிப்பிலான சிறுகடன் பெறுவதற்கான உத்தரவு, 5 பேருக்கு நல வாரிய அட்டை, ஈரோடு மாநகராட்சி மண்டலம்-3 சாா்பில் 15 தூய்மைப் பணியாளா்களுக்கு பணிப் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன. சிறப்பாக தூய்மைப் பணிபுரிந்த 9 பேருக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை ஆட்சியா் வழங்கினாா்.

மாநகராட்சி மேயா் சு.நாகரத்தினம், ஆணையா் அா்பித் ஜெயின், மாவட்ட மேலாளா் (தாட்கோ) முருகவேல், உதவி இயக்குநா் ஊராட்சிகள் (பயிற்சி) பிரசாந்த், மாநகர நல அலுவலா் கௌரி சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.