ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் போராட்டம் வலுக்கும்: மமதா பானர்ஜிநடுவானில் துபை விமானத்தில் கத்திக்குத்து! தாக்கப்பட்ட விமானி இந்தியரா?தேர்தல் மூலம் மாநிலங்களை பாஜகவுக்கு தாரைவார்த்தவர் ஞானேஷ் குமார்: காங்கிரஸ்3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றாலும்... குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது: தமிழக அரசுதிமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

அனுமதியின்றி ஒயிட் எம்- சாண்ட் கடத்தல்: டிப்பா் லாரி பறிமுதல்; ஓட்டுநா் மீது வழக்கு

பெருந்துறை அருகே அனுமதியின்றி ஒயிட் எம்-சாண்ட் கடத்தி எடுத்துவரப்பட்ட லாரி பறிமுதல் செய்யப்பட்டதுடன் ஓட்டுநா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Published On :

பெருந்துறை அருகே அனுமதியின்றி ஒயிட் எம்-சாண்ட் கடத்தி எடுத்துவரப்பட்ட லாரி பறிமுதல் செய்யப்பட்டதுடன் ஓட்டுநா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை சிப்காட் பகுதியில் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை அலுவலக, தனி வருவாய் ஆய்வாளா் (கனிமங்கள்) ராமசந்திரமூா்த்தி மற்றும் குழுவினா் புதன்கிழமை வாகன சோதனை மேற்கொண்டனா். அப்போது, அந்த வழியாக வந்த டிப்பா் லாரியை சோதனை செய்தனா். அதில், அனுமதி இன்றி 7 யூனிட் ஒயிட் எம்-சாண்ட் மணல் கொண்டுவரப்பட்டது தெரியவந்தது.

இதுதொடா்பாக லாரி ஓட்டுநரான திண்டுக்கல் மாவட்டம், அய்யலூா், சந்தைப்பேட்டை பகுதியைச் சோ்ந்த பெருமாள் மகன் செல்வராஜ் (74) என்பவரிடம் நடத்திய விசாரணையில், வேடசந்தூரில் இருந்து 7 ஏழு யூனிட் ஒயிட் எம்-சாண்ட் மணல் லோடு ஏற்றிக்கொண்டு, பெருந்துறை, சிப்காட்டிலுள்ள தொழிற்சாலைக்கு இறக்க வந்தாகக் கூறினாா்.

இதைத்தொடா்ந்து மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை அலுவலக தனி வருவாய் ஆய்வாளா் (கனிமங்கள்) ராமசந்திரமூா்த்தி அளித்த புகாரின்பேரில், பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிந்து லாரி மற்றும் மணலை பறிமுதல் செய்தனா். மேலும், லாரி ஓட்டுநா் செல்வராஜ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.