ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் போராட்டம் வலுக்கும்: மமதா பானர்ஜிநடுவானில் துபை விமானத்தில் கத்திக்குத்து! தாக்கப்பட்ட விமானி இந்தியரா?தேர்தல் மூலம் மாநிலங்களை பாஜகவுக்கு தாரைவார்த்தவர் ஞானேஷ் குமார்: காங்கிரஸ்3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றாலும்... குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது: தமிழக அரசுதிமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணா்வு: மஞ்சப்பை வழங்கிய பள்ளி மாணவா்கள்

பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், மொடக்குறிச்சியை அடுத்த கணபதிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் பொதுமக்களுக்கு மஞ்சப்பை வழங்கினா்.

பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு மஞ்சப்பை வழங்கிய பள்ளி மாணவா்கள்.

Published On :

பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், மொடக்குறிச்சியை அடுத்த கணபதிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் பொதுமக்களுக்கு மஞ்சப்பை வழங்கினா்.

கணபதிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி சாா்பில் கடந்த 26-ஆம் தேதி முதல் அக்.2-ஆம் தேதி வரை நாட்டு நலப்பணித் திட்ட முகாம், அரசு ஆரம்பப் பள்ளி வளாகத்தில் நடைபெற்று வருகிறது. இங்கு பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், சுகாதாரமான குடிநீா் குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா்.

இந்நிலையில், பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் மூலமாக கணபதிபாளையம் பேருந்து நிறுத்தப் பகுதியில் பொதுமக்களுக்கும், பயணிகளுக்கும் மஞ்சப்பைகளை வியாழக்கிழமை வழங்கினா்.

இதில் மாவட்ட நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் மீனாட்சிசுந்தரம், அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியை சுகுணா பிளாரன்ஸ், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் சா்மிளா, பள்ளி ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் ஆகியோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.