காந்தி நினைவிடத்தில் அமர்ந்து இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் தர்னா!தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலுக்கு 10 பேர் பலி; 21,655 பேர் பாதிப்பு! அமைச்சர் அருண்ராஜ்எஸ்ஐஆருக்கு எதிரான போராட்டம்: ஞானேஷ்குமாருக்கு Z+ பாதுகாப்பு அதிகரிப்பு!‘காலா’ பட நடிகர் நானா படேகர் காலமானார்!பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் காலமானார்!நவ.2 முதல் பத்திரப் பதிவில் காகிதமில்லா பயன்பாடு: தமிழக அரசு அரசாணை வெளியீடு வெங்காயம் விலை மேலும் குறையும்: மத்திய அரசு தமிழகத்தில் 1.7 கோடி ஸ்மார்ட் மீட்டர்: ஒப்பந்தப்புள்ளி கோரியது மின் வாரியம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு: அக்.1-இல் 18 வயது நிறைவடைந்தோருக்கு வாய்ப்புஇஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதலின் 3-ஆம் ஆண்டு நினைவு தினம் ஜேஇஇ முதன்மைத் தோ்வு 2026: ஐஐடி சோ்க்கையில் கணினி அறிவியலுக்கு மாணவா்கள் முன்னுரிமை விலைவாசி உயா்வுக்கு யாா் பொறுப்பு? மத்திய அரசுக்கு காங்கிரஸ் கேள்விவானொலி தலைமையகத்துக்குள் அத்துமீறி நுழைந்ததாக ராகுல் காந்தி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு

குன்னூர்: தேயிலை பாரம் தூக்கும் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்

குன்னூரில் கடந்த 15 நாள்களாக நடைபெற்று வந்த தேயிலை பாரம் தூக்கும் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வெள்ளிக்கிழமை வாபஸ் பெறப்பட்டது.

Published On :

குன்னூரில் கடந்த 15 நாள்களாக நடைபெற்று வந்த தேயிலை பாரம் தூக்கும் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வெள்ளிக்கிழமை வாபஸ் பெறப்பட்டது.

குன்னூரில் உள்ள தேயிலைக் கிடங்குகள் மேட்டுப்பாளையம், காரமடை ஆகிய இடங்களுக்கு மாற்றப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேயிலை பாரம் தூக்கும்  தொழிலாளர்கள் 200-க்கும் மேற்பட்டோர் கடந்த 15 நாள்களாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதன்காரணமாக தேயிலைத் தொழிற்சாலைகள், கிடங்குகளில் ரூ. 20 கோடி மதிப்பிலான தேயிலைகள், தேயிலைத் தூள்கள் தேக்கமடைந்தன. இதனால், நீலகிரியில் தேயிலைத் தொழில் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டது.

இதையடுத்து, வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர மாவட்ட வருவாய் அலுவலர் பாஸ்கர பாண்டியன் முன்னிலையில் வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அதில், தற்போது மேட்டுப்பாளையம், காரமடைப் பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்ட 35-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளின் தேயிலைகளைத் தவிர மேற்கொண்டு புதிய கிடங்குகள் அமைக்காமல் இருக்கவும், புதிதாக உருவாகி உள்ள  டீ பார்க்கிற்கு குன்னூரில் உள்ள சுமைப் பணித் தொழிலாளர்களை பயன்படுத்த ஒத்துழைப்பு அளிப்பதென்றும் உறுதியளிக்கப்பட்டது.

இதையடுத்து, சுமைப் பணித் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தாற்காலிகமாக கைவிடப்பட்டது.

இந்தப் பேச்சுவார்த்தையில் குன்னூர் கோட்டாட்சியர் பழனிகுமார், வட்டாட்சியர் ஜான் மனோகர், தேயிலை வாரிய அதிகாரிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆர்.பத்ரி, சிஐடியு மாவட்டச் செயலாளர் ஆல்துரை, தேயிலை பாரம் தூக்கும் தொழிலாளர் சங்கத் தலைவர் கிருஷ்ணமுர்த்தி, செயலாளர் சுரேஷ்  உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.