வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

சேரங்கோடு ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம்

நீலகிரி மாவட்டத்தில் சேரங்கோடு ஊராட்சியில்  இம்மாதம் 19 மற்றும் 29ஆம் தேதிகளில் சிறப்பு கிராமசபைக்  கூட்டங்கள் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :16 நவம்பர் 2017, 2:05 am

DIN

நீலகிரி மாவட்டத்தில் சேரங்கோடு ஊராட்சியில்  இம்மாதம் 19 மற்றும் 29ஆம் தேதிகளில் சிறப்பு கிராமசபைக்  கூட்டங்கள் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
 இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா வெளிட்ட செய்தி:
நீலகிரி மாவட்டத்தில், 2017-18ஆம் ஆண்டுக்கான விலையில்லா வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் வழங்கும் திட்டத்தின்கீழ், கூடலூர்  ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட சேரங்கோடு  ஊராட்சியில் 210 பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகள் வழங்கப்பட உள்ளன. இதற்கான பயனாளிகளை தேர்வு செய்ய சேரங்கோடு ஊராட்சியில் இம்மாதம் 19 மற்றும் 29ஆம் தேதிகளில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறும்.  எனவே,  இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்று, பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.