முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வுகருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

குன்னூரில் புத்தக கண்காட்சி தொடக்கம்

குன்னூர் ஒய்எம்சிஏ அருகே ஜான்ஸ் பாரீஷ் ஹாலில் செவ்வாய்க்கிழமை புத்தகக்  கண்காட்சி தொடங்கியது. 

Updated On :5 ஏப்ரல் 2018, 6:56 am IST

குன்னூர் ஒய்எம்சிஏ அருகே ஜான்ஸ் பாரீஷ் ஹாலில் செவ்வாய்க்கிழமை புத்தகக்  கண்காட்சி தொடங்கியது. 
சிடிசன்ஸ் பாரம் தலைவர் ஜெபரத்தினம் வரவேற்றார். எழுத்தாளர்,  மொழி பெயர்ப்பாளர் ராஜதுரை கண்காட்சியை  தொடக்கி வைத்தார். குன்னூர் நகராட்சி மார்க்கெட் வியாபாரிகள் சங்கத் தலைவர் பரமேஸ்வரன் தலைமை வகித்தார். எல்.ஐ.சி. இளங்கோவன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். 
ஏப்ரல் 8-ஆம் தேதி வரை நடக்கும் இந்த கண்காட்சியில், விற்பனை செய்யப்படும் புத்தகங்களுக்கு, 10 சதவீதம் தள்ளுபடியும், பள்ளி குழந்தைகளுக்கு, 15 சதவீத தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது. நுழைவுக் கட்டணம் இல்லாமல் இலவசமாக கண்காட்சியைக் காண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பள்ளி மாணவ, மாணவியர் தாங்கள் படித்த புத்தகம் தொடர்பான கட்டுரைகளை  எழுதி அனுப்ப அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 
இதில் சிறந்த கட்டுரைகளுக்கு  ஏப்ரல் 7-ஆம் தேதி பரிசு வழங்கப்பட உள்ளது. 8-ஆம் தேதி எழுத்தாளர்கள், படைப்பாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள், சங்கமம், எதிர்கால திட்டங்கள் குறித்த விவாதத்துடன் கண்காட்சி நிறைவு பெறுகிறது.
 நிகழ்ச்சிக்கான  ஏற்பாடுகளை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம், அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு, தன்னார்வ அமைப்புகள் செய்திருந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.