அரிசி விலை உயர்வு இன்னும் ஆட்சியாளர்களின் காதுகளுக்கு எட்டவில்லை போலும்! பெ. சண்முகம்பெரம்பூர் தொகுதியில் முதல்வர் விஜய்! மக்களிடம் மனுக்களைப் பெற்றார்!மாதவரம் ஆவின் பால் பண்ணை ஆய்வகக் கட்டடத்தை திறந்து வைத்தார் முதல்வர் விஜய்!ராகுல், பிரியங்கா மீது தில்லி காவல்துறை வழக்குப்பதிவு!ரெப்போ வட்டி விகிதம் 5.50% ஆக உயர்வு! வீட்டு, வாகன கடன் வட்டி அதிகரிக்க வாய்ப்பு!‘தவெக ஆட்சியில் மின்வெட்டை மிஞ்சும் அரிவாள் வெட்டு’ - மு.க. ஸ்டாலின் கண்டனம்

விதிகளை மீறிய காட்டேஜ்களுக்கு அனுமதிபெற ஆகஸ்ட் 31க்குள் விண்ணப்பிக்க வேண்டும்: மாவட்ட ஆட்சியர்

நீலகிரி மாவட்டத்தில் விதிகளை மீறி காட்டேஜ் கட்டியுள்ளவர்கள் உரிய அனுமதி பெற ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று  மாவட்ட  நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. 

Published On :

நீலகிரி மாவட்டத்தில் விதிகளை மீறி காட்டேஜ் கட்டியுள்ளவர்கள் உரிய அனுமதி பெற ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று  மாவட்ட  நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. 
இது குறித்து  நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள செய்தி:
நீலகிரி மாவட்டத்தில் அதிக அளவிலான கட்டடங்கள் விதிகளை மீறி கட்டப்பட்டு வருவது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிப் பகுதிகளில் பலரும் வீட்டுமனைக் குடியிருப்புக் கட்டடங்களுக்கு அனுமதி பெற்றுகொண்டு காட்டேஜ்களாக பயன்படுத்தி வருவது கள ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனை முறைப்படுத்தும் வகையில் வீட்டுமனைக் குடியிருப்பு அனுமதி பெற்று காட்டேஜ்களாகப் பயன்படுத்தும் உரிமையாளர்கள் ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் வீட்டுமனை குடியிருப்புக் கட்டடங்களை காட்டேஜ்களாக பயன்படுத்துவதற்கான திருத்திய திட்டத்தை தொடர்புடைய உள்ளாட்சி அமைப்புகளிடம்  சமர்ப்பிக்க வேண்டும். 
சமர்ப்பிக்க தவறும்பட்சத்தில், அனுமதியில்லாத காட்டேஜ்களுக்கு செப்டம்பர் மாதத்தில் சீல் வைத்து சட்டப்பூர்வ  நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.