பௌர்ணமி கிரிவலம்: அக்.25, 26-ல் விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்! அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்: முதல்வர் விஜய் ஸ்லீப் மோடில் இருந்து வெளியே வருவாரா? - உதயநிதி ஸ்டாலின் கேள்வி பிசிசிஐ இளையோர் தேர்வுக்குழு தலைவராக பர்விந்தர் அவானா நியமனம்! ஹௌதி தாக்குதல்! சௌதி உடனான இண்டிகோ விமான சேவைகளின் ரத்து நீட்டிப்பு! சென்னை விமான நிலையத்தில் வீரமணியின் மகள் தடுத்து நிறுத்தம்!

தூதூர்மட்டத்தில் மேராக்காய் தோட்டங்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்

மஞ்சூர் அருகே தூதூர்மட்டம் கிராமத்தில் விளைநிலத்துக்குள் காட்டு யானைகள் புகுந்து மேராக்காய் தோட்டங்களை சேதப்படுத்தின.

Updated On :

மஞ்சூர் அருகே தூதூர்மட்டம் கிராமத்தில் விளைநிலத்துக்குள் காட்டு யானைகள் புகுந்து மேராக்காய் தோட்டங்களை சேதப்படுத்தின.
நீலகிரி மாவட்டம், மஞ்சூர் அருகே மானார், தூதூர்மட்டம், கோட்டக்கல், தைமலை உள்ளிட்ட பகுதிகள் அடர்ந்த வனப் பகுதி, தேயிலைத் தோட்டங்களுக்கு இடையே அமைந்துள்ளன.  
இந்நிலையில், மானார் குடியிருப்பு அருகே  ரேஷன் கடை,  ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் உள்ள சத்துணவு அரிசி, பருப்புகளை சாப்பிட குட்டியுடன் 6 யானைகள் கடந்த ஒரு வாரமாக இப்பகுதியில் சுற்றித்திரிகின்றன.
இப்பகுதியில் உள்ள யானைகள் வனப் பகுதி வழியாக தூதூர்மட்டம் பகுதிக்குள் புகுந்து விளைநிலத்திலுள்ள மேராக்காய் தோட்டங்களை சேதப்படுத்தின.  
தூதூர்மட்டம் உயர்நிலைப் பள்ளி அருகே உள்ள விளைநிலங்களையும் சேதப்படுத்தியன. பள்ளிக்கு அருகே காட்டு யானைகள் தொடர்ந்து முகாமிட்டு வருவதால் மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.