தைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

தகாத வார்த்தைகளால் பேசிய காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தோடர் இன மக்கள் எஸ்.பி.யிடம் புகார் மனு

உதகையில்  நடைபெற்ற தோடர் இன மக்களின் ஸ்ரீபவானிஸ்வரர் கோயில் தேர் திருவிழாவின்போது  தோடர் இன

Updated On :25 டிசம்பர் 2018, 5:55 am IST

உதகையில்  நடைபெற்ற தோடர் இன மக்களின் ஸ்ரீபவானிஸ்வரர் கோயில் தேர் திருவிழாவின்போது  தோடர் இன மக்களைத் தகாத வார்த்தைகளால் பேசிய நகர மத்திய காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி  மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
உதகையில் தோடர் இன மக்களின் குல தெய்வமான ஸ்ரீ பவானிஸ்வரர் திருக்கோயிலின் 107ஆம் ஆண்டு ஆருத்ரா தரிசன மகா உற்சவப் பெருவிழா  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முக்கிய வீதிகள் வழியாக பவானீஸ்வரர் தேர் பவனி நடைபெற்றது. 
இந்நிலையில்,  தேரோட்டத்தின்போது காவல் துறையினர் போதிய பாதுகாப்பு அளிக்கவில்லை எனவும், தங்களை காவல் துறையினர் தகாத வார்த்தைகளால் பேசியதாகவும் கூறி காவல் துறையினரிடம் தோடர் இன மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது இரு தரப்பினருக்கிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து, தோடர் இன மக்களை அவமதிக்கும் வகையில் தகாத வார்த்தைகளால் பேசிய காவல் ஆய்வாளர் உள்ளிட்ட போலீஸார் மீது  நடவடிக்கை எடுக்கக் கோரியும்,  தோடர் இன மக்களிடம் அவர்கள் வருத்தம் தெரிவிக்க வேண்டும் எனக் கூறியும்  மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா,  மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா ஆகியோரிடம் புகார் மனு அளித்தனர்.
இது தொடர்பாக மேல் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தோடர் இன மக்களைக் கலந்தாலோசித்து அடுத்த கட்ட போராட்டங்களில் ஈடுபடப்போவதாக தோடர் இன மக்கள் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.