உதகையில் நடைபெற்ற தோடர் இன மக்களின் ஸ்ரீபவானிஸ்வரர் கோயில் தேர் திருவிழாவின்போது தோடர் இன மக்களைத் தகாத வார்த்தைகளால் பேசிய நகர மத்திய காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
உதகையில் தோடர் இன மக்களின் குல தெய்வமான ஸ்ரீ பவானிஸ்வரர் திருக்கோயிலின் 107ஆம் ஆண்டு ஆருத்ரா தரிசன மகா உற்சவப் பெருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முக்கிய வீதிகள் வழியாக பவானீஸ்வரர் தேர் பவனி நடைபெற்றது.
இந்நிலையில், தேரோட்டத்தின்போது காவல் துறையினர் போதிய பாதுகாப்பு அளிக்கவில்லை எனவும், தங்களை காவல் துறையினர் தகாத வார்த்தைகளால் பேசியதாகவும் கூறி காவல் துறையினரிடம் தோடர் இன மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது இரு தரப்பினருக்கிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து, தோடர் இன மக்களை அவமதிக்கும் வகையில் தகாத வார்த்தைகளால் பேசிய காவல் ஆய்வாளர் உள்ளிட்ட போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், தோடர் இன மக்களிடம் அவர்கள் வருத்தம் தெரிவிக்க வேண்டும் எனக் கூறியும் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா ஆகியோரிடம் புகார் மனு அளித்தனர்.
இது தொடர்பாக மேல் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தோடர் இன மக்களைக் கலந்தாலோசித்து அடுத்த கட்ட போராட்டங்களில் ஈடுபடப்போவதாக தோடர் இன மக்கள் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இன்றைய ராசி பலன் (25.06.2026) - கன்னி
இன்றைய ராசி பலன் (25.06.2026) - சிம்மம்
இன்றைய ராசி பலன் (25.06.2026) - கடகம்

ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ.94.65! 11 காசுகள் உயர்வு!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


