பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

"இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம்': உதகை கோ-ஆப்டெக்ஸில் சிறப்புத் திட்டம் அறிமுகம்

உதகை கோ-ஆப்டெக்ஸில்  "இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம்' என்ற சிறப்புத் திட்டம் புதன்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 3:08 am

DIN

உதகை கோ-ஆப்டெக்ஸில்  "இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம்' என்ற சிறப்புத் திட்டம் புதன்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.
தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸில் வாடிக்கையாளர்கள் பயனடையும் வகையிலான இத்திட்டத்தை  கோ-ஆப்டெக்ஸ் துணை மண்டல மேலாளர் அம்சவேணி, கிளை  மேலாளர் சபீனா நாஸ் ஆகியோர் முன்னிலையில், சமூக ஆர்வலரும், இண்டாக் அமைப்பின் தலைவருமான கீதா சீனிவாசன் புதன்கிழமை தொடங்கி வைத்தார்.  
இதைத் தொடர்ந்து கோ-ஆப்டெக்ஸ் துணை மண்டல மேலாளர் அம்சவேணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம்' என்ற இத்திட்டம் கைக்குட்டை முதல் பட்டுப்புடவை வரை அனைத்து ரகங்களுக்கும் பொருந்தும். வாடிக்கையாளர்கள் இரண்டு ஆடைகளை வாங்கினால் ஒன்றை இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம். 
மேலும், வாடிக்கையாளர்கள் வாங்கும் இரண்டாவது ரகத்துக்குரிய விலைக்குள் அவர்கள் விரும்பும் வேறு எந்த ரகத்தையும் இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம். இச் சிறப்பு விற்பனை மார்ச் 31-ஆம் தேதி வரை செயல்படுத்தப்படும். 
இச் சிறப்பு விற்பனைக்காக, புதிய வடிவமைப்புடன் கூடிய மென்பட்டுப் புடவைகள்,  காஞ்சிபுரம், ஆரணி,  தஞ்சை போன்ற இடங்களில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டுப் புடவைகள், கோவை கோரா காட்டன் சேலைகள்,  பருத்திச் சேலைகள்,  போர்வைகள்,  படுக்கை விரிப்புகள் ஆகியவற்றுடன் ஏற்றுமதி துணி ரகங்களும் தருவிக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டில் இத் திட்டத்தின்கீழ் கோவை மண்டலத்தில் உள்ள விற்பனை நிலையங்கள் மூலம் ரூ. 4.34 கோடிக்கு  விற்பனை செய்யப்பட்டது.  நடப்பு ஆண்டின் விற்பனை குறியீடாக ரூ. 6 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
உதகை மலையரசி நிலையத்தில் கடந்த ஆண்டில்  ரூ. 14 லட்சத்துக்கு  துணிகள் விற்பனை செய்யப்பட்டன.  நடப்பு ஆண்டில் விற்பனைக் குறியீடாக ரூ. 25 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.