வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

நடுவட்டம் பகுதியில் பள்ளிகளில் ஆட்சியர் ஆய்வு

நடுவட்டம் பகுதியில் நடைபெற்றுவரும் பள்ளி வளர்ச்சிப் பணிகளை மாவட்ட  ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 3:07 am

DIN

நடுவட்டம் பகுதியில் நடைபெற்றுவரும் பள்ளி வளர்ச்சிப் பணிகளை மாவட்ட  ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.
 நடுவட்டம் பகுதியில் பைக்காரா அரசு நடுநிலைப் பள்ளியில் ஒருங்கிணைந்த கல்வி வளர்ச்சித் திட்டத்தின் கீழ்  ரூ. 3.39 லட்சம் மதிப்பில் பள்ளி கட்டிடங்களின் பழுது பார்ப்புப் பணிகளைப் பார்வையிட்டு, பள்ளி மாணவ, மாணவியரிடையே கல்வியின் தரத்தையும்  ஆட்சியர் கேட்டறிந்தார்.  
அதைத் தொடர்ந்து, இந்திரா நகர் தொடக்கப் பள்ளியில் ரூ. 11.68  லட்சம்  மதிப்பில் நடைபெற்று வரும்  பள்ளி கட்டிடப் பணி, சுற்றுச்சுவர் பணியையும்,  அப்பர் பிராஸ்பெக்ட்  தொடக்கப் பள்ளியில் ரூ. 5.87  லட்சம் மதிப்பிலான கட்டிட பணியையும்,  ஹாசிங்டன் அரசு தொடக்கப் பள்ளியில் ரூ. 23.31 லட்சம் மதிப்பில்  நடைபெறும் கட்டுமானப் பணிகளையும் பார்வையிட்டு  அவர் ஆய்வு செய்தார். 
ஹாசிங்டன் பள்ளி வளாகத்தில் மக்களிடமிருந்து  கோரிக்கை மனுக்களை ஆட்சியர் பெற்றுக் கொண்டார். இந்த  ஆய்வின்போது  வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ்  கிருஷ்ணன், அரசுத் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.