மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

பிணந்தின்னி கழுகுகளை பாதுகாக்க விழிப்புணர்வுப் பதாகை

அழிந்து வரும் பட்டியலில் உள்ள பிணந்தின்னி கழுகுகளைப் பாதுகாக்கும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி கோத்தகிரியில்  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :23 ஜூலை 2018, 7:49 am IST

அழிந்து வரும் பட்டியலில் உள்ள பிணந்தின்னி கழுகுகளைப் பாதுகாக்கும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி கோத்தகிரியில்  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மலைகளின் அரசி என்றழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் சுமார் 55 சதவீதம் வனப் பகுதியை கொண்ட மாவட்டமாகும். இந்த வனப் பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை, மான் உள்ளிட்ட விலங்குகளும், கழுகு போன்ற அரிய வகை பறவை இனங்களும் வாழ்ந்து வருகின்றன.
இந்நிலையில், வன தூய்மையாளன் என்று அழைக்கப்படும் பிணந்தின்னி கழுகுகள் மாயாறு ஆற்றுப் படுகை மற்றும் தெங்குமரஹாடா பகுதிகளில் அதிக அளவில் இருந்தன. காலபோக்கில் பல்வேறு காரணங்களால் இந்த வகை கழுகுகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து அழிவின் பட்டியலில் இடம் பெற்றது. 
இதனைத் தொடர்ந்து பிணந்தின்னிக் கழுகுகளைப் பாதுகாக்க பல்வேறு அமைப்புகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
இந்நிலையில், பிணந்தின்னி கழுகுகள் அதிகமாக காணப்படும் கோத்தகிரி, கோடநாடு காட்சி முனைப் பகுதியில் பிணந்தின்னி கழுகுகளைப் பாதுகாக்க வலியுறுத்தி அருளகம் அமைப்பு மற்றும் பாறு கழுகுகள் பாதுகாப்புக்கான தென்னிந்திய கூட்டமைப்பு சார்பில் விழிப்புணர்வுப் பதாகை அமைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஒய்வுபெற்ற நீலகிரி மாவட்ட தெற்கு வனக்கோட்ட அலுவலர் பத்ரசாமி இந்த விழிப்புணர்வுப் பதாகையை திறந்து வைத்தார்.  இதில் பல்வேறு தன்னார்வ  அமைப்புகள் கலந்து கொண்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.