மஞ்சூர் சுற்றுப்புறப் பகுதிகளில் சாலையோரங்களில் உள்ள அபாயகரமான மரங்கள் அகற்றுவதற்கான கணக்கெடுக்கும் பணி துவங்கியது.
மஞ்சூரில் இருந்து உதகை, குன்னூர், கோரகுந்தா, மேல்பவானி, கிண்ணக்கொரை, எமரால்டு, அவலாஞ்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சாலைகளின் இருபுறங்களிலும் ஏராளமான மரங்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான மரங்கள் பட்டுப் போய் காணப்படுகின்றன. இதனால், காற்று, மழைக் காலங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து சாலையில் வாடிக்கையாக உள்ளது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்கள் பாதிக்கின்றனர்.
இந்நிலையில், அண்மையில் சூறாவளிக் காற்றுடன் பெய்த பலத்த மழையால் கிண்ணக்கொரை, குந்தாபாலம், கோரகுந்தா, மேல்பவானி, சாம்ராஜ் உள்ளிட்ட பகுதிகளில் மரங்கள் சாலையில் விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். இதையடுத்து மஞ்சூர் சுற்றுப்புறப் பகுதிகளில் சாலையோரங்களில் விழும் நிலையில் உள்ள அபாயகரமான மரங்கள் குறித்து ஆய்வு செய்து அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் குந்தா வருவாய்த் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை சார்பில் மஞ்சூர்-உதகை சாலையில் குந்தா பாலம் பகுதியில் ஆபத்தான மரங்களை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
குந்தா பாலம் முதல் கைகாட்டி வரையிலான 100-க்கு மேற்பட்ட மரங்கள் அபாயகரமான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மெரீனாவில் 2 வயது குழந்தை மீட்பு: சிங்கப் பெண் அதிரடிப் படையினா் நடவடிக்கை!

சேலம் பாலியல் வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

குடிநீா் பற்றாக்குறை: சத்தா்பூரில் ஆம் ஆத்மி போராட்டம்

கொடைக்கானல் வாரச் சந்தை பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


