எந்த இடத்தில் குற்றம் நடந்ததோ அங்கே வழக்குப் பதிவு செய்யச் சொல்லி திருப்பி அனுப்பாமல் எங்கு புகார் அளிக்கப்படுகிறதோ அங்கேயே வழக்குப் பதிவு செய்யப்படும் என ரயில்வே காவல்துறை ஏடிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னுôர் வரை மலை ரயிலில் திங்கள்கிழமை பயணித்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்ட ரயில்வே டூரிஸ்ட் ஹெல்ப் என்ற நண்பர்கள் குழு துவங்கப்பட்டுள்ளது.
தில்லியில் இருந்து சென்னை வரும்போது குற்றம் நடந்தால் எந்த இடத்தில் குற்றம் நடந்ததோ அங்கே வழக்குப் பதிவு செய்யச் சொல்லி திருப்பி அனுப்பாமல், எங்கு புகார் அளிக்கிறார்களோ அங்கேயே வழக்குப் பதிவு செய்யப்படும். குழந்தை கடத்தலை தடுக்க ரயில்வே காவல்துறையினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு மலை ரயிலில் பயணிப்போருக்கு உதவும்விதமாக மேட்டுப்பாளையத்திலுள்ள ரயில்வே அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட தன்னார்வலர்களை இணைத்து அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இவர்கள் வழிகாட்டுவார்கள்.
விரைவில் அனைத்து ரயில் நிலையங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்படும். இதனால் குற்றங்கள் குறைந்து விடும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தவறாமல் வாக்களிப்போம்

மகிழ்ச்சி இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

லெபனான்-இஸ்ரேல் அமைதிப் பேச்சு: உடன்பாட்டுக்குக் கட்டுப்பட மாட்டோம் - ஹிஸ்புல்லா திட்டவட்டம்

சமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்பு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

