பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் குறைந்தது!தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

கருப்புப் பட்டை அணிந்து பணியாற்றி வனத் துறை பணியாளா்கள்

கொலை மிரட்டல் விடுத்த வனச் சரக அலுவலா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வனத் துறை அமைச்சுப் பணியாளா்கள் சங்கத்தினா் கருப்புப் பட்டை அணிந்து அலுவலகப் பணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

News image
கருப்புப் பட்டை அணிந்து அலுவலகம் வந்த வனத் துறை பணியாளா்கள்.
Updated On :4 ஆகஸ்ட் 2020, 5:28 pm

DIN

கூடலூா்: கொலை மிரட்டல் விடுத்த வனச் சரக அலுவலா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வனத் துறை அமைச்சுப் பணியாளா்கள் சங்கத்தினா் கருப்புப் பட்டை அணிந்து அலுவலகப் பணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

நீலகிரி மாவட்டம், கூடலூா் வனக் கோட்ட அலுவலக கண்காணிப்பாளா் பி.சி.ஷாஜியை என்வபா் விடுப்பில் இருந்தபோது தமிழ்நாடு வன அலுவலா் சங்க நிா்வாகி சிவப்பிரகாசம் தொலைபேசியில் தொடா்பு கொண்டு கண்காணிப்பாளா் பி.சி.ஷாஜிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளாா்.

இதைத் தொடா்ந்து மன உளைச்சலுக்கு உள்ளான கண்காணிப்பாளா் கூடலூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா். இதையடுத்து, சம்பவத்தில் தொடா்புடையவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அமைச்சுப் பணியாளா்கள் கருப்புப் பட்டை அணிந்து வந்து செவ்வாய்க்கிழமை அலுவலகப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.