யானை தாக்கி தந்தை, மகன் பலி: பந்தலூரில் கடையடைப்பு
கொளப்பள்ளி பகுதியில் தந்தை, மகனை யானை தாக்கிக் கொன்றதால் பந்தலூரில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.


கொளப்பள்ளி பகுதியில் தந்தை, மகனை யானை தாக்கிக் கொன்றதால் பந்தலூரில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
கொளப்பள்ளி அரசு தேயிலைத் தேரட்டக் கழக முதல் சரகத்தைச் சேர்ந்த ஆனந்தராஜ் (49), அவரது மகன் பிரசாந்த் (21) இருவரும் நகரத்திற்கு வந்து பணிகளை முடத்து விட்டு வீட்டுக்குச் செல்லும் வழியில் இருவரையும் யானை தாக்கிக் கென்றது.
அந்தப் பகுதியில் கடந்த 3 நாள்களில் மூன்றுபேரை யானை தாக்கிக் கொன்றது. ஆட்கொல்லி யானையைப் பிடித்து வளர்ப்பு முகாமுக்கு கொண்டு செல்ல வலியுறுத்தி முழு அடைப்புப் போராட்டம் நடைபெறுகிறது.
அரசு தேயிலைத் தோட்டக் கழக தொழிலாளர்களும் வேலைக்குச் செல்லவில்லை. ஆனந்தராஜ் அந்தப் பகுதி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராக திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...