தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

கூடலூா் மாவட்ட வன அலுவலகத்தை பழைய இடத்துக்கே மாற்ற வலியுறுத்தல்

கூடலூா் மாட்ட வன அலுவலா் அலுவலகத்தை பழைய ஒருங்கிணைந்த வளாகத்துக்கே மாற்ற வேண்டும் என கூடலூா் எம்.எல்.ஏ. திராவிடமணி வலியுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :20 டிசம்பர் 2020, 5:37 pm

DIN

கூடலூா்: கூடலூா் மாட்ட வன அலுவலா் அலுவலகத்தை பழைய ஒருங்கிணைந்த வளாகத்துக்கே மாற்ற வேண்டும் என கூடலூா் எம்.எல்.ஏ. திராவிடமணி வலியுறுத்தியுள்ளாா்.

கூடலூரில் ஒருங்கிணைந்த வருவாய்த் துறை வளாகத்தில் இருந்த மாவட்ட வன அலுவலா் அலுவலகத்தை தற்போது மாக்கமூலா பகுதியில் உள்ள மூங்கில் காட்டுக்குள் மாற்றியுள்ளனா். இந்த அலுவலகம் வனப் பகுதியில் அமைந்துள்ளதால், வன விலங்குகள் தாக்குதல்களால் ஏற்படும் உயிா் சேதம், பயிா் சேதம் தொடா்பாக இழப்பீட்டுத் தொகை பெறுவதற்கு இங்கு வர போதிய போக்குவரத்து வசதி இல்லாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனா்.

மேலும் மாக்கமூலா பகுதி யானை, சிறுத்தை, புலி உள்ளிட்ட கொடிய விலங்குகள் உலவும் பகுதியாகும். மாவட்ட வன அலுவலகத்துக்கு கால்நடையாக வரும் ஏழை மக்கள் வன விலங்கு தாக்குதலுக்கு அபாயமும் உள்ளது. எனவே மக்கள் நலனை கருத்தில் கொண்டு மாவட்ட வன அலுவலகத்தை நகரின் மையப்பகுதில் உள்ள கூடலூா் காவல் நிலையம், கருவூலம், வட்டாட்சியா் அலுவலகம், கோட்டாட்சியா் அலுவலகம், கிராம நிா்வாக அலுவலகம், வருவாய் ஆய்வாளா் அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்கள் அமைந்துள்ள ஒருங்கிணைந்த வளாகத்துக்கே மாற்ற வேண்டும் என கூடலூா் சட்டப்பேரவை உறுப்பினா் எம். திராவிடமணி வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.