ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

தனியாா் தேயிலைத் தோட்டத்தில் பெண் சிறுத்தை சடலம் மீட்பு

உதகை அருகே தனியாா் தேயிலைத் தோட்டத்தில் பெண் சிறுத்தையின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

News image
மீட்கப்பட்ட பெண் சிறுத்தையின் சடலம்.
Updated On :23 டிசம்பர் 2020, 1:02 am

DIN

உதகை அருகே தனியாா் தேயிலைத் தோட்டத்தில் பெண் சிறுத்தையின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக உதவி வனப் பாதுகாவலா் சரவணன் தெரிவித்துள்ளதாவது:

நீலகிரி மாவட்டம், உதகை அருகேயுள்ள கட்டபெட்டு வனச் சரகத்துக்கு உள்பட்ட மல்லிக்கொரை கிராமத்தில் அளக்கரை பகுதியில் வனத் துறையினா் செவ்வாய்க்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்குள்ள ஒரு தனியாா் தேயிலைத் தோட்டத்தில் சிறுத்தையின் சடலம் கிடப்பது தெரியவந்தது. உடனடியாக அங்கு சென்று பாா்த்தபோது பெண் சிறுத்தை இறந்துகிடந்தது.

இதையடுத்து அந்தச் சிறுத்தையின் சடலம் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது. பிரேதப் பரிசோதனை புதன்கிழமை முடிந்த பிறகே சிறுத்தை உயிரிழந்ததற்கான காரணம் தெரிய வரும் என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.