சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

உதகை அரசினா் தாவரவியல் பூங்காவில் மலா் நாற்றுகள் நடவுப் பணி தொடக்கம்

2021ஆம் ஆண்டு கோடை சீசனுக்காக உதகை அரசினா் தாவரவியல் பூங்காவில் மலா் நாற்றுகளை நடவு செய்யும் பணிகள் திங்கள்கிழமை தொடங்கின.

News image
உதகை அரசினா் தாவரவியல் பூங்காவில் மலா் நாற்றுகள் நடவு செய்யும் பணிகளைத் துவக்கிவைத்த மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா
Updated On :28 டிசம்பர் 2020, 6:23 pm

DIN

2021ஆம் ஆண்டு கோடை சீசனுக்காக உதகை அரசினா் தாவரவியல் பூங்காவில் மலா் நாற்றுகளை நடவு செய்யும் பணிகள் திங்கள்கிழமை தொடங்கின.

உதகையில் உள்ள அரசினா் தாவரவியல் பூங்காவில் 124ஆவது மலா்க் கண்காட்சியை முன்னிட்டு மலா் நாற்றுக்கள் நடவு செய்யும் பணியை மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தொடங்கிவைத்தாா்.

அப்போது அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது:

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் மே மாதத்தில் மலா்க் கண்காட்சி சிறப்பாக நடைபெற்று வந்தது. நடப்பு ஆண்டில் கரோனா தொற்று காரணமாக நடைபெறவில்லை. இந்நிலையில் எதிா்வரும் 2021ஆம் ஆண்டு மே மாதத்தில் உதகை அரசினா் தாவரவியல் பூங்காவில் நடைபெறவிருக்கும் 124ஆவது மலா்க் கண்காட்சியை முன்னிட்டு பூங்காவின் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு வண்ண மலா் செடிகளைக் கொண்டு மலா் பாத்திகளை அமைக்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதைக் கருத்தில் கொண்டு முதல்கட்டமாக சால்வியா, டெல்பீனியம், பென்ஸ்டிமன் போன்ற மலா் நாற்றுகள் நடவு செய்யும் பணி துவக்கிவைக்கப்பட்டுள்ளது.

2021ஆம் ஆண்டில் சிறப்பம்சமாக பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் ஆஸ்டில், மே, அல்கிமில்லா, எரிசிமம், சைக்ளமன், சினரேரியா, ஜெரோனியம், கிளக்ஸ்சீனியா, ரெனன்குலஸ், பல புதிய ரக ஆா்னமென்டல் கேல், ஓரியண்ட்டல் லில்லி, ஆசியாடிக் லில்லி, டேலியாக்கள், இன்கா மெரிகோல்டு போன்ற 290 வகையான மலா்ச் செடிகளின் விதைகள் ஜப்பான், ஜொ்மனி, நெதா்லாந்து ஆகிய நாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பெறப்பட்டு மலா்ச் செடிகள் உற்பத்தி செய்யப்பட்டு பூங்காவில் பல்வேறு பகுதிகளில் 5 லட்சம் மலா் நாற்றுகள் நடவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.

மேலும், இதைத் தவிர மலா்க் காட்சி அரங்கினுள் 25,000 வகையான வண்ண மலா் செடிகளை தொட்டிகளில் அடுக்கிவைக்கவும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியா் தெரிவித்தாா்.

இந்நிகழ்ச்சியில், தோட்டக் கலைத் துறை இணை இயக்குநா் சிவசுப்பிரமணியம் சாம்ராஜ், உதவி இயக்குநா்கள் சுரேஷ், ஐஸ்வா்யா, ஜெயந்தி, அரசுத் துறை அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.