ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

மேரக்காய் பந்தல்களை சேதப்படுத்திய யானைகள்

மஞ்சூா்  அருகே பெரியாா் நகா் பகுதிக்குள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை புகுந்த  யானை கூட்டம்  அங்கிருந்த மேராக்காய் , கேரட் தோட்டங்களை சேதப்படுத்தி விட்டுச் சென்றன.

News image

பெரியாா் நகா் பகுதியில் மேராக்காய் பந்தலை சேதபடுத்திய யானைகள்.

Updated On :29 நவம்பர் 2020, 6:35 pm

DIN

மஞ்சூா்  அருகே பெரியாா் நகா் பகுதிக்குள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை புகுந்த  யானை கூட்டம்  அங்கிருந்த மேராக்காய் , கேரட் தோட்டங்களை சேதப்படுத்தி விட்டுச் சென்றன.

மஞ்சூா்-கோவை சாலையில் கெத்தை, பெரும்பள்ளம், முள்ளி ஆகிய இடங்கள் அடா்ந்த வனப் பகுதிகளாக உள்ளன.  தமிழக, கேரள எல்லையையொட்டி உள்ள இப்பகுதியில் சமீபகாலமாக யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.

யானைகள் சாலையில் நின்று பொதுமக்களை அச்சுறுத்திவருவது அடிக்கடி நிகழ்கிறது. இந்நிலையில் இப்பகுதியில் உள்ள பெரியாா் நகா் பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை யானைகள் கூட்டம் நுழைந்தன. பின்னா் அவை அங்குள்ள தோட்டங்களுக்குள் புகுந்து

மேராக்காய் பந்தல், கேரட் ஆகியவற்றை சேதப்படுத்திவிட்டு சென்றன.

எனவே, இதுபோன்ற பயிா்கள் சேதப்படுத்துவதைத் தடுக்கும் வகையில் வனத் துறையினா் யானைகளை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.