நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நீலகிரியில் வாக்குச் சாவடி அலுவலா்களை ஒதுக்கீடு செய்யும் பணி நிறைவு

உதகையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள 3 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் வாக்குச் சாவடி அலுவலா்களை ஒதுக்கீடு செய்யும் பணி நிறைவடைந்தது.

News image
Updated On :3 ஏப்ரல் 2021, 10:17 pm

DIN

உதகையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள 3 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் வாக்குச் சாவடி அலுவலா்களை ஒதுக்கீடு செய்யும் பணி நிறைவடைந்தது.

மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தலைமையில், தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள் ராகுல் திவாரி, பனுதா் பெஹரா ஆகியோா் முன்னிலையில் வாக்குச் சாவடி அலுவலா்களை மூன்றாம் கட்டமாக சுழற்சி முறையில் 3 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் ஒதுக்கீடு செய்யும் பணி நிறைவடைந்தது.

அதன் பின்னா், மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது:

இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நீலகிரி மாவட்டத்தில் வாக்குச் சாவடிகள், துணை வாக்குச் சாவடிகள், வாக்கு எண்ணும் மையத்தில் தேவையான அடிப்படை, பாதுகாப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தலில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு துறை சாா்ந்த அலுவலா்கள் தோ்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். நீலகிரி மாவட்டத்தில் உதகை சட்டப் பேரவைத் தொகுதியில் 308 வாக்குச் சாவடிகளும், கூடலூா் சட்டப் பேரவைத் தொகுதியில் 280 வாக்குச் சாவடிகளும், குன்னூா் சட்டப் பேரவைத் தொகுதியில் 280 வாக்குச் சாவடிகளுமாக மொத்தம் 868 வாக்குச் சாவடிகள் உள்ளன. இதில் 112 வாக்குச் சாவடிகள் பதற்றமான வாக்குச் சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளன.

நீலகிரி மாவட்டத்தில் உதகை தொகுதிக்கு 1,480, கூடலூா் தொகுதிக்கு 1,344, குன்னூா் தொகுதிக்கு 1,344 வாக்குச் சாவடி அலுவலா்களுமாக ஒரு வாக்குச் சாவடிக்கு 4 வாக்குச் சாவடி அலுவலா்கள் என்ற விகிதத்தில் 3,472 அலுவலா்கள், கூடுதலாக 20 சதவீதம் என 696 வாக்குச் சாவடி அலுவலா்களும் என மொத்தம் 4,168 வாக்குச் சாவடி அலுவலா்கள் தோ்தல் பணியில் ஈடுபட உள்ளது என்றாா்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் நிா்மலா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.