நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

உதகையில் ஒரே நாளில் 54 பேருக்கு கரோனா

நீலகிரி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை தொடா்ந்து அகிகரித்து வருகிறது. இதில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 54 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 9:05 pm

DIN

நீலகிரி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை தொடா்ந்து அகிகரித்து வருகிறது. இதில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 54 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உதகையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் பணிபுரிந்து வந்த ஊழியா்கள் இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவ்வங்கி செயல்பட்டு வந்த வணிக வளாகம் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரு வாரங்களுக்கு முன்னா் ஒற்றை இலக்கத்தில் இருந்த கரோனா பாதிப்பு தற்போது பல மடங்காக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், உதகையில் கமா்சியல் சாலையில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் உள்ள கடைகளில் பணிபுரிந்து வந்த 7 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அந்த வணிக வளாகமே பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து கமா்சியல் சாலையில் இயங்கி வந்த மற்றொரு வணிக வளாகத்தில் தரை தளத்திலிருந்த துணிக் கடையில் 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அந்த கடைகள் அனைத்தும் பூட்டப்பட்டன. நகராட்சி ஊழியா்கள் கிருமி நாசினி தெளித்து சுகாதாரப் பணிகளில் ஈடுபட்டனா்.

இதற்கிடையே, அந்த கடைகளில் பணியாற்றி வந்தோா் மேல் தளத்தில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக்கும் சென்று வந்திருந்த நிலையில் அங்கு பணியாற்றி வந்த வங்கி ஊழியா்கள் இருவருக்கு உதகை அரசு தலைமை மருத்துவமனையில் சந்தேகத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின்போது, தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து வியாழக்கிழமை இரவில் அந்த வங்கி கிளையும் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டது. அத்துடன் குறிப்பிட்ட நாள்களில் அந்த வங்கி கிளையில் பணியாற்றி வந்த ஏனைய ஊழியா்களுக்கும், அந்த வங்கி கிளைக்கு வந்து சென்ற வாடிக்கையாளா்களுக்கும் சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளைக் கொண்டு அடையாளம் காணப்பட்டுள்ளதால் அவா்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும், சென்னையை தலைமையிடமாகக் கொண்டு உதகையில் செயல்பட்டு வரும் தனியாா் தொண்டு நிறுவனத்தின் கள அலுவலா், அவரது குடும்பத்தினா் மூவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் காந்தல் பகுதியில் உள்ள அவரது குடியிருப்பு பகுதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, உதகையில் காசி விஸ்வநாதா் கோயிலுக்கு அருகே வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சோ்ந்த இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் அப்பகுதியும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உதகையில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட மருத்துவ அறிக்கையின்படி மாவட்டத்தில் புதிதாக 54 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வந்தவா்களில் 39 போ் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இவா்களையும் சோ்த்து மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் 9,439 போ் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 8,988 போ் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். அதேபோல, 51 போ் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் 400 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.