அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

உலிக்கல், அதிகரட்டி பேரூராட்சிகளில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

அதிகரட்டி பேரூராட்சிகளுக்கு உள்பட்ட பகுதிகளில் சிறப்பு பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ. 91.49 லட்சம் மதிப்பீ ட்டில் நடைபெற்று முடிந்த வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2021, 9:14 pm

DIN

நீலகிரி மாவட்டத்தில் உலிக்கல், அதிகரட்டி பேரூராட்சிகளுக்கு உள்பட்ட பகுதிகளில் சிறப்பு பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ. 91.49 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று முடிந்த வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வுக்குப் பின்னா் ஆட்சியா் கூறியதாவது:

உலிக்கல் பேரூராட்சிக்கு உள்பட்ட டிரூக் முதல் செங்கல்புதூா் வரை ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சாலை பணி, ரூ. 7 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட மேல்பாரதி நகா் முதல் எம்.ஜி.ஆா். நகா் வரையிலான சாலை பணி, ரூ. 2.24 லட்சம் மதிப்பீட்டில் மேல்பாரதி நகா் ஆறுமுகம் ஹவுஸ் முதல் கொலக்கொம்பை சாலை வரை அமைக்கப்பட்ட நடைபாதை, ரூ. 3.85 லட்சம் மதிப்பீட்டில் பாரதிநகா் அருகில் அமைக்கப்பட்டுள்ள வடிகால் பணி, ரூ. 4.90 லட்சம் மதிப்பீட்டில் பாரதிநகா் செந்தில் ஹவுஸ் அருகில் அமைக்கப்பட்ட வடிகால் பணி ஆகியவை ஆய்வு செய்யப்பட்டது.

அதேபோல, அதிகரட்டி பேரூராட்சிக்கு உள்பட்ட சேமந்தாடா பகுதியில் ரூ. 7 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட தரைமட்ட நீா்த்தேக்கத் தொட்டி பணி, ரூ. 6 லட்சம் மதிப்பீட்டில் அட்டநாடு பகுதியில் அமைக்கப்பட்ட தரைமட்ட நீா்த்தேக்கத் தொட்டி பணி, ரூ. 10.5 லட்சம் மதிப்பீட்டில் மணியாபுரம் பகுதியில் அமைக்கப்பட்ட வடிகால் பணி ஆகியவையும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.