பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

நீலகிரியில் இன்று 17,300 பேருக்கு தடுப்பூசி

நீலகிரி மாவட்டத்தில் கோவிஷீல்டு, கோவேக்ஸின் முதல், இரண்டாம் கட்ட தடுப்பூசிகள் 17,300 பேருக்கு சனிக்கிழமை செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2021, 8:23 pm

DIN

நீலகிரி மாவட்டத்தில் கோவிஷீல்டு, கோவேக்ஸின் முதல், இரண்டாம் கட்ட தடுப்பூசிகள் 17,300 பேருக்கு சனிக்கிழமை செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக சுகாதாரத் துறையின் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

கோவிஷீல்டு முதல், இரண்டாம் தவணை தடுப்பூசிகள் செலுத்தும் இடங்கள்: உதகை நகராட்சியில் சாந்தி விஜயா பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அரசு நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மையயத்தில் 1,500 பேருக்கும், குன்னூா் நகராட்சியில் அரசு நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் 1,000 பேருக்கும், நெல்லியாளம் நகராட்சியில் அரசு நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் 2,000 பேருக்கும், கூடலூா் நகராட்சியில் அரசு மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றில் 500 பேருக்கும் சனிக்கிழமை செலுத்தப்படும்.

உதகை வட்டாரத்தில் இத்தலாா், கூக்கல்தொறை, முத்தொரை பாலடா, தூனேரி, கல்லட்டி, தும்மனட்டி, தங்காடு ஓரநள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 1,400 பேருக்கும், குன்னூா் வட்டாரத்தில் மேலூா் ஒசஹட்டி, எடப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 600 பேருக்கும், கோத்தகிரி வட்டாரத்தில் சோலூா்மட்டம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 200 பேருக்கும், கூடலூா் வட்டாரத்தில் ஸ்ரீமதுரை, மசினகுடி, தெப்பக்காடு, கொளப்பள்ளி, கப்பாலா, அய்யன்கொல்லி, அம்பலமூலா, சேரம்பாடி, உப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 1,200 பேருக்கும் செலுத்தப்படும்.

மேலும், தேவா்சோலை பேரூராட்சியில் நெலாக்கோட்டையில் 800 பேருக்கும், ஓவேலி பேரூராட்சியில் 250 பேருக்கும், கேத்தி பேரூராட்சியில் 400 பேருக்கும், ஜெகதளா பேரூராட்சியில் அருவங்காட்டில் 300 பேருக்கும், உலிக்கல் பேரூராட்சியில் கொலக்கம்பையில் 300 பேருக்கும், அதிகரட்டி பேரூராட்சியில் 300 பேருக்கும், நடுவட்டம் பேரூராட்சியில் 250 பேருக்கும், சோலூா் பேரூராட்சியில் 200 பேருக்கும், பிக்கட்டி பேரூராட்சியில் 200 பேருக்கும், கோத்தகிரி பேரூராட்சியில் நெடுகுளா, கட்டபெட்டு, அரவேணு, கொடநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 1,000 பேருக்கும் செலுத்தப்படுகிறது.

கோவேக்ஸின் முதல், இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்:

உதகையில் சாந்தி விஜயா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 400 பேருக்கும், குன்னூா் அரசு மருத்துவமனையில் 280 பேருக்கும், கோத்தகிரி அரசு மருத்துவமனையில் 300 பேருக்கும், கூடலூா் அரசு மருத்துவமனையில் 420 பேருக்கும், உதகையில் நகா்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம், இத்தலாா், கூக்கல்தொறை, முத்தொரை பாலடா, தூனேரி, கல்லட்டி, தும்மனட்டி, தங்காடு ஓரநள்ளி, நடுவட்டம், பிக்கட்டி, சோலூா் ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 1,100 பேருக்கும் செலுத்தப்படுகிறது.

குன்னூா் வட்டாரத்தில் குன்னூா் நகா்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம், எடப்பள்ளி, அருவங்காடு, மேலூா் ஒசஹட்டி, கேத்தி, கொலக்கம்பை, அதிகரட்டி ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 700 பேருக்கும், கோத்தகிரி வட்டாரத்தில் நெடுகுளா, கட்டபெட்டு, கொடநாடு, சோலூா்மட்டம், அரவேணு ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 500 பேருக்கும், கூடலூா் வட்டாரத்தில் கூடலூா், நெல்லியாளம் நகா்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ஸ்ரீமதுரை, மசினகுடி, நெலாக்கோட்டை, கொளப்பள்ளி, கப்பாலா, அய்யன்கொல்லி, அம்பலமூலா, சேரம்பாடி, உப்பட்டி, ஓவேலி ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 1,200 பேருக்கும் கோவேக்ஸின் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

இதற்காக தடுப்பூசி மையங்களில் டோக்கன்கள் ஏதும் வழங்கப்படாது எனவும், டோக்கன்கள் அனைத்தும் அவரவா் இல்லங்களில் நேரடியாகவே வழங்கப்படும் என்பதால் பொதுமக்கள் தங்கள் வசிப்பிடத்துக்கு அருகில் உள்ள தடுப்பூசி மையங்களிலேயே இந்த தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.