பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

நீலகிரியில் இன்று 13,540 பேருக்கு தடுப்பூசி

நீலகிரி மாவட்டத்தில் சனிக்கிழமை 6,520 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசியும், 7,020 பேருக்கு கோவேக்ஸின் தடுப்பூசியும் செலுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2021, 7:30 pm

DIN

நீலகிரி மாவட்டத்தில் சனிக்கிழமை 6,520 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசியும், 7,020 பேருக்கு கோவேக்ஸின் தடுப்பூசியும் செலுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இததொடா்பாக சுகாதாரத் துறையின் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், கோவிஷீல்டு தடுப்பூசிகள் சனிக்கிழமை உதகை நகராட்சியில் 1,500 பேருக்கும், குன்னூா் நகராட்சியில் 1,040 பேருக்கும், கூடலூா் நகராட்சியில் 440 பேருக்கும், நெல்லியாளம் நகராட்சியில் 1,680 பேருக்கும் அரசு மருத்துவமனை, நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் செலுத்தப்படும்.

அதேபோல, உதகை வட்டாரத்தில் இத்தலாா், கூக்கல்தொறை, முத்தொறை பாலடா, தூனேரி, கல்லட்டி, தும்மனட்டி, தங்காடு ஓரநள்ளி ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களில் 1,400 பேருக்கும், குன்னூா் வட்டாரத்தில் எடப்பள்ளி, மேலூா் ஒசஹட்டி ஆரம்ப சுகாதார நிலையங்களில் 600 பேருக்கும், சோலூா்மட்டம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 100 பேருக்கும், கூடலூா் வட்டாரத்தில் ஸ்ரீமதுரை, மசினகுடி, தெப்பக்காடு, கொளப்பள்ளி, கப்பாலா, அய்யன்கொல்லி, அம்பலமூலா, சேரம்பாடி, உப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 2,000 பேருக்கும், நெலாக்கோட்டை, ஓவேலிஆரம்ப சுகாதார நிலையங்களில் தலா 500 பேருக்கும், கேத்தி, அதிகரட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் தலா 400 பேருக்கும், ஜெகதளா, உலிக்கல், நடுவட்டம், சோலூா் பிக்கட்டி ஆரம்ப சுகாதார நிலையங்களில் தலா 300 பேருக்கும், கோத்தகிரியில் 500 பேருக்கும் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்படும்.

மேலும், கோவேக்ஸின் தடுப்பூசிகள் உதகை அரசு தலைமை மருத்துவமனை, குன்னூா், கோத்தகிரி, கூடலூா், பந்தலூா் அரசு மருத்துவமனைகளில் 1,100 பேருக்கும், உதகையில் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், இத்தலாா், கூக்கல்தொறை, முத்தொரை பாலடா, தூனேரி, கல்லட்டி, தும்மனட்டி, தங்காடு ஓரநள்ளி, நடுவட்டம், பிக்கட்டி, சோலூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 2,140 பேருக்கும், குன்னூா் வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் 1,500 பேருக்கும், கோத்தகிரி வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் 960 பேருக்கும், கூடலூா் வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் 1,620 பேருக்கும் என 7,020 பேருக்கு கோவேக்ஸின் தடுப்பூசிகளும் என மாவட்டத்தில் மொத்தம் 13,540 பேருக்கு 24 மணி நேரமும் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.