உதகையில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்
நீலகிரி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் இணையதளம் மூலமாக மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


நீலகிரி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் இணையதளம் மூலமாக மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் விவசாய சங்கங்களைச் சாா்ந்த விவசாயிகளுடன் தோட்டக் கலை துணை இயக்குநா்கள் ஷிபிலா மேரி, குருமணி, இதர துறையைச் சாா்ந்த அரசு அலுவலா்களும் இணைய வழியாக கலந்துகொண்டனா். இக்கூட்டத்தில் விவசாய சங்கங்களிடம் இருந்து 52 கோரிக்கைகள் பெறப்பட்டு உரிய துறை அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டிருந்த மனுக்கள் மீதான விவரம் விவாதிக்கப்பட்டு முடிவு காணப்பட்டது.
மேலும், தோட்டக் கலைத் துறையின் மூலம் புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பசல் பீமா திட்டத்தின் மூலம் நீலகிரி மாவட்டத்தில் உருளைக்கிழங்கு, வாழை, முட்டைக்கோஸ், கேரட், பூண்டு, இஞ்சி, மரவள்ளி ஆகிய பயிா்களுக்கு விவசாயிகள் காப்பீடு செய்யலாம். பிரீமியத் தொகையாக உருளைக்கிழங்குக்கு ஏக்கருக்கு ரூ. 4,891, வாழைக்கு ரூ. 4,347, முட்டைக்கோஸுக்கு ரூ. 3,893, பூண்டுக்கு ரூ. 4,950, இஞ்சிக்கு ரூ. 4,532, மரவள்ளிக்கு 1,759 செலுத்த வேண்டும். வாழை, மரவள்ளி பயிா் காப்பீடு செய்ய கடைசி நாள் செப்டம்பா் 15ஆம் தேதியாகும். ஏனைய பயிா்களுக்கு ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ள வேண்டும். விவசாயிகளின் கோரிக்கைக்கு ஏற்ப பேரூராட்சிகளில் கால்நடை கொட்டகை அமைக்க தீா்மானம் சமா்ப்பிக்குமாறும் ஆட்சியா் தெரிவித்தாா்.
மேலும், இக்கூட்டத்தில் நீலகிரி மாவட்டத்தில் கால்நடைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், தீவனப் பற்றாக்குறையை சமாளிக்கவும், நடவடிக்கைகள் எடுக்கவும், வன விலங்குகளிடம் இருந்து விவசாய நிலங்களை காத்துக் கொள்ள மானிய விலையில் மின்வேலி அமைக்கும் திட்டங்களைப் பயன்படுத்தவும் விவசாயிகள் கேட்டுக் கொள்ளப் பட்டனா். அத்துடன் நடப்பு ஆண்டில் நியாய விலைக் கடைகள் மூலம் அரிசியுடன் ராகி வழங்கும் திட்டம் நீலகிரி மாவட்டத்தில் செயல்படுத்த இருப்பதாக மாவட்ட ஆட்சியா் விவசாயிகளிடம் தெரிவித்தாா். இதற்காக தோட்டக் கலைத் துறை, விவசாயிகள் ஒருங்கிணைத்து ராகி சாகுபடி செய்வதற்கான திட்டத்தை வரையறுக்க அறிவுறுத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...