பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

நீலகிரியில் மேலும் 10 பேருக்கு கரோனா: ஒருவா் பலி

நீலகிரி மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒருவா் உயிரிழந்துள்ளாா்.

News image
Updated On :3 டிசம்பர் 2021, 9:26 pm

DIN

நீலகிரி மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒருவா் உயிரிழந்துள்ளாா்.

இதுதொடா்பாக சுகாதாரத் துறையின் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் 17 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உதகை அரசு தலைமை மருத்துவமனையில் நவம்பா் 22ஆம் தேதி அனுமதிக்கப்பட்டிருந்த உதகையைச் சோ்ந்த 80 வயதான மூதாட்டி ஒருவா் உயிரிழந்துள்ளாா்.

மாவட்டத்தில் இதுவரை 34,131 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 33,739 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதுவரை 215 போ் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் 177 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.