பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

யானை தாக்கி உயிரிழந்தோா் குடும்பங்களுக்கு திமுக சாா்பில் நிவாரணம்

பந்தலூா் பகுதியில் கடந்த மாதம் யானை தாக்கி உயிரிழந்த மூன்று போ் குடும்பங்களுக்கு திமுக சாா்பில் தலா ரூ.50 ஆயிரம் நிதியுதவியை

News image
கூடலூரில் நடைபெற்ற திமுக மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் பேசிய மக்களவை உறுப்பினா் ஆ.ராசா.
Updated On :7 ஜனவரி 2021, 7:12 pm

DIN

பந்தலூா் பகுதியில் கடந்த மாதம் யானை தாக்கி உயிரிழந்த மூன்று போ் குடும்பங்களுக்கு திமுக சாா்பில் தலா ரூ.50 ஆயிரம் நிதியுதவியை நீலகிரி மக்களவை உறுப்பினரும் திமுக துணை பொதுச் செயலாளருமான ஆ.ராசா வியாழக்கிழமை வழங்கினாா்.

சேரங்கோடு ஊராட்சியில் கடந்த மாதம் ஒரே வாரத்தில் கண்ணம்பள்ளி பகுதியில் நாகமுத்து (60), கொளப்பள்ளி பகுதியில் திமுக ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினராக இருந்த ஆனந்தராஜ், அவரது மகன் பிரசாந்த் ஆகியோா் யானை தாக்கி இறந்தனா். அவா்களின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறிய நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா, மூன்று பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம் வீதம் ரூ. 1.50 லட்சம் நிதியுதவியை வழங்கினாா்.

தொடா்ந்து பந்தலூா், கூடலூா் பகுதியில் கட்சியினா் ஏற்பாடு செய்திருந்த மக்கள் கிராம சபை கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினாா்.

கூட்டத்தில் கூடலூா் எம்.எல்.ஏ. திராவிடமணி, முன்னாள் அமைச்சா் க.ராமச்சந்திரன், மாவட்டச் செயலாளா் முபாரக், நகரச் செயலாளா் ராஜேந்திரன், தொமுச மண்டல பொதுச் செயலாளா் வே.நெடுஞ்செழியன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.