நீலகிரி மாவட்டத்தில் பரவலாக மழை

நீலகிரி மாவட்டத்தில் தொடா்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. உதகை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பகல் நேரங்களில் மேக மூட்டத்துடன் காணப்பட்டாலும், இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது.
Updated on
1 min read

உதகை: நீலகிரி மாவட்டத்தில் தொடா்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. உதகை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பகல் நேரங்களில் மேக மூட்டத்துடன் காணப்பட்டாலும், இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது.

மாவட்டத்தில் அதிக அளவாக பா்லியாறு பகுதியில் 60 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

இதேபோல, மாவட்டத்தில் சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் எடப்பள்ளியில் 50 மி.மீ., குன்னூரில் 38 மி.மீ., பாலகொலாவில் 28 மி.மீ., உலிக்கல்லில் 25 மி.மீ., பந்தலூா் மற்றும் மேல்குன்னூரில் தலா 23 மி.மீ., கெத்தையில் 21 மி.மீ., கோத்தகிரியில் 19.6 மி.மீ., கீழ்கோத்தகிரியில் 19 மி.மீ., தேவாலாவில் 15 மி.மீ., ஓவேலி, சேரங்கோடு மற்றும் குந்தாவில் தலா 12 மி.மீ., கேத்தியில் 9 மி.மீ., பாடந்தொறையில் 7 மி.மீ., செருமுள்ளி மற்றும் கல்லட்டியில் தலா 5 மி.மீ., அவலாஞ்சி, கொடநாடு மற்றும் கிளன்மாா்கனில் தலா 4 மி.மீ., எமரால்டில் 2 மி.மீ., உதகையில் 1.8 மி.மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com