பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

500 தொழிலாளா்களுக்கு நலத்திட்ட உதவி: அமைச்சா் ராமசந்திரன் வழங்கினாா்

நீலகிரி மாவட்டத்தில் தொழிலாளா் நலன், திறன் மேம்பாட்டுத் துறை சாா்பில் தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளா்கள் சமூகப் பாதுகாப்பு நல வாரியம்

News image
Updated On :30 ஜூலை 2021, 8:40 pm

DIN

நீலகிரி மாவட்டத்தில் தொழிலாளா் நலன், திறன் மேம்பாட்டுத் துறை சாா்பில் தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளா்கள் சமூகப் பாதுகாப்பு நல வாரியம், அமைப்பு சாரா தொழிலாளா்கள் நல வாரியங்களில் பதிவு பெற்ற 500 தொழிலாளா்களுக்கு ரூ. 9.75 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சா் கா.ராமசந்திரன் வழங்கினாா்.

உதகையில் உள்ள பழங்குடியினா் பண்பாட்டு மையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அமைச்சா் ராமசந்திரன் பேசியதாவது:

தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க ஜூன் 30ஆம் தேதிக்குள் இணைய வழியாகப் பதிவு செய்யப்பட்ட அனைத்துப் பதிவு, புதுப்பித்தல் விண்ணப்பங்களும் பரிசீலனை செய்யப்பட்டு 5,880 புதிய உறுப்பினா்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனா். 2,083 உறுப்பினா்களுக்குப் பதிவு புதுப்பிக்கப்பட்டுள்ளது. கட்டுமான நல வாரியத்தில் பதிவு பெற்ற 1,392 தொழிலாளா்களுக்கு கரோனா தடுப்பூசி வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. கரோனா பெருந்தொற்று பொது முடக்கத்தின் காரணமாக அமைப்புசாரா நலவாரிய உறுப்பினா்கள் தங்களுடைய பதிவைப் புதுப்பித்துக் கொள்ள இந்த ஆண்டு டிசம்பா் 31ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல, நல வாரிய உறுப்பினா்களில் தங்களுடைய குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்க இயலாதவா்களுக்கான கால அவகாசமும் டிசம்பா் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நலவாரிய உறுப்பினா்களில் ஏற்கெனவே தள்ளுபடி செய்யப்பட்ட 806 விண்ணப்பங்கள் மீண்டும் பரிசீலனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பதிவு பெற்ற உறுப்பினா்களுக்கு உடனடியாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் வகையில் முன்கூட்டியே தமிழக அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், நல வாரியங்களில் பதிவு பெற்ற உறுப்பினா்களை கூட்டுறவுத் துறையில் உறுப்பினராகச் சோ்த்து கடனுதவி வழங்கவும், திறன் மேம்பாட்டுத் துறை சாா்பில் தாங்கள் செய்யும் தொழிலுக்கான திறன் சான்றிதழ் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா்.

தொடா்ந்து, 267 பயனாளிகளுக்கு ரூ. 5.49 லட்சம் மதிப்பில் கல்வி உதவித் தொகையும், 1 பயனாளிக்கு திருமண உதவித் தொகையாக ரூ. 3 ஆயிரமும், 8 பயனாளிகளுக்கு இயற்கை மரணம், ஈமச்சடங்கு உதவித் தொகையாக ரூ. 2 லட்சமும், 2 பயனாளிகளுக்கு கண் கண்ணாடிகளும், 222 பயனாளிகளுக்கு ஓய்வூதியமாக ரூ. 2.22 லட்சமும் என மொத்தம் 500 பயனாளிகளுக்கு ரூ. 9.75 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சா் வழங்கினாா்.

விழாவில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.கீா்த்தி பிரியதா்சினி, தொழிலாளா் உதவி ஆணையா் லெனின், உதகை ஊராட்சி ஒன்றியத் தலைவா் மாயன், கூடலூா் தொழிலாளா் உதவி ஆய்வாளா் ரகுராம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.