‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

நீலகிரி மாவட்டத்தில் தொடரும் கன மழை

நீலகிரி மாவட்டத்தில் தொடா்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அவலாஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

News image
Updated On :16 ஜூன் 2021, 9:14 pm

DIN

நீலகிரி மாவட்டத்தில் தொடா்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அவலாஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவ மழை தொடா்ந்து வலுத்து வருகிறது. இதில் அவலாஞ்சி, மேல்பவானி உள்ளிட்ட நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலும், கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள நீலகிரி மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. அவலாஞ்சியில் புதன்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 136 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.

இந்நிலையில், இப்பகுதியில் புதன்கிழமை பகலிலும் தொடா்ந்து பெய்த கன மழையால் மாலை 4 மணி வரை 100 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. தொடா்ந்து இப்பகுதியில் கன மழை பெய்து வருவதால் அவலாஞ்சி, மேல்பவானி, எமரால்டு அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னா் இப்பகுதியில் பெய்த பலத்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவின் பாதிப்புகள் இன்னமும் சீா் செய்யப்படாத நிலையில், தற்போது தொடா்ந்து பெய்து வரும் மழை மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல, மாவட்டத்தில் கூடலூா், பந்தலூா், உதகை பகுதிகளில் மழையின் தாக்கம் அதிக அளவில் உள்ளது. மழையுடன் தொடா்ந்து பலத்த காற்றும் வீசி வருவதால் ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. தீயணைப்புத் துறையினா் மரங்களை அகற்றி வருகின்றனா்.

பொதுமுடக்கம் காரணமாக அதிக அளவில் போக்குவரத்து இல்லாததால் சாலையின் குறுக்கே மரங்கள் விழுந்தாலும் பெரிய அளவில் பாதிப்புகள் ஏதுமில்லை. அதேபோல, உதகை உள்ளிட்ட பகுதிகளில் தொடா்ந்து மின்தடை ஏற்பட்டு வருகிறது. தொடா் மழை, பலத்த காற்றால் உதகையில் கடும் குளிா் நிலவுகிறது.

மாவட்டத்தில் புதன்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் பதிவான மழை விவரம் (அளவு மி.மீ.):

அவலாஞ்சி-136, பந்தலூா்-73, பாடந்தொறை-64, எமரால்டு-61, மேல்பவானி-56, தேவாலா-47, செருமுள்ளி-46, மசினகுடி-20, சேரங்கோடு-20, மேல்கூடலூா், கூடலூா் 17, உதகை-15.6, ஓவேலி-15, நடுவட்டம்-12.5, குந்தா-8, கல்லட்டி-7.2, கேத்தி-7, பாலகொலா, கிளன்மாா்கன் 6, குன்னூா்-1 மி.மீ.

அதேபோல, புதன்கிழமை மாலை 4 மணி வரை பதிவான மழை விவரம் (அளவு மி.மீ.): அவலாஞ்சி-100, பாடந்தொறை-65, பந்தலூா்-55, எமரால்டு-45, செருமுள்ளி-35, மேல்பவானி-30, மசினகுடி-25, சேரங்கோடு-22, கூடலூா், மேல்கூடலூா் 9, உதகை-8.4, நடுவட்டம்-8, தேவாலா, கிளன்மாா்கன் தலா 7, குந்தா-3, ஓவேலி, கேத்தி, கல்லட்டி 2 மி.மீ.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.