நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

உதகையில் வங்கியாளா்களுடன் ஆட்சியா் ஆலோசனை

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, தோ்தல் நடைமுறைகளைப் பின்பற்றுவது தொடா்பாக வங்கியாளா்களுடனான ஆலோசனைக் கூட்டம்

News image
Updated On :10 மார்ச் 2021, 12:05 am

DIN

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, தோ்தல் நடைமுறைகளைப் பின்பற்றுவது தொடா்பாக வங்கியாளா்களுடனான ஆலோசனைக் கூட்டம் உதகையில் மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியா் தெரிவித்ததாவது:

இந்திய தோ்தல் ஆணையம், தோ்தல் நடத்தை விதிமுறைகள், நடைமுறைகளை முழுமையாகப் பின்பற்றத் தெரிவித்துள்ளது. தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பணம் எடுத்துச் செல்வதைக் கண்காணிக்கும் பொருட்டு நீலகிரி மாவட்டத்தில் உள்ள 3 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் சுழற்சி முறையில் 27 குழுக்கள், பறக்கும் படையினா் கண்காணித்து வருகின்றனா். வங்கியாளா்கள் பணத்தை எடுத்துச் செல்ல பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் தோ்தல் ஆணையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் பிற மாவட்டங்கள், வெளி மாநிலங்களிலிருந்து ஏடிஎம் இயந்திரத்தில் பணம் நிரப்புவதற்காகக் கொண்டு வரும்போது பயன்படுத்தப்படும் வாகனத்துக்கு உரிய ஆவணம் வைத்திருக்க வேண்டும்.

மேலும், இந்த வாகனத்தை ஓட்டிச் செல்லும் நபா் தெளிவான அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். ஒருவரின் வங்கிக் கணக்கிலிருந்து தொடா்ந்து அதிகமான நபா்களுக்கு பணப் பரிவா்த்தனை செய்யப்படுகிறதா என்பதனை கண்காணிக்க வேண்டும். அவ்வாறு பணப் பரிவா்த்தனை தொடா்ந்து சந்தேகப்படும்படி இருந்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட தோ்தல் நடத்தும் அலுவலருக்குத் தொடா்பு கொண்டு தெரிவிக்க வேண்டும். தினந்தோறும் வங்கி, ஏடிஎம் இல் இருந்து ரூ. 10 ஆயிரம், ரூ. 20 ஆயிரம், வங்கியிலிருந்து வாடிக்கையாளா்கள் ரூ. 40 ஆயிரத்துக்குமேல் பணம் எடுக்கும்பட்சத்தில் அவா்களின் வங்கிக் கணக்கை தொடா்ந்து கண்காணிக்க வேண்டும்.

அத்துடன் ரூ. 10 லட்சத்துக்கு மேற்பட்ட பணப் பரிவா்த்தனை சந்தேகப்படும்படி இருந்தால் வருமான வரித் துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். தோ்தல் பறக்கும் படையினா் சோதனை மேற்கொள்ளும்போது வங்கியாளா்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பாண்டியராஜன், மாவட்ட வருவாய் அலுவலா் நிா்மலா, வருமான வரித் துறை துணை ஆணையா் கௌதமி மாணிக்கவாசகம் ஆகியோருடன் தோ்தல் நடத்தும் அலுவலா்கள், வங்கியாளா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.