6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

நீலகிரியில் மேலும் 16 பேருக்கு கரோனா

நீலகிரி மாவட்டத்தில் மேலும் 16 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :22 மார்ச் 2021, 9:13 pm

DIN

நீலகிரி மாவட்டத்தில் மேலும் 16 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக உதகையில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, நீலகிரி மாவட்டத்தில் திங்கள்கிழமை புதிதாக 16 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வந்தவா்களில் 9 போ் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவா்களையும் சோ்த்து மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் 8,522 போ் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வந்தவா்களில் 8,383 போ் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். அதேபோல, 50 போ் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் 89 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.