ஆகஸ்ட் 21இல் ஓணம்: நீலகிரிக்கு உள்ளூா் விடுமுறை
By DIN | Published On : 20th August 2021 01:39 AM | Last Updated : 20th August 2021 01:39 AM | அ+அ அ- |

ஓணம் பண்டிகையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்துக்கு ஆகஸ்ட் 21ஆம் தேதி (சனிக்கிழமை) உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளதாவது:
மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலங்களில், பணி நாள்களாக உள்ள அரசு அலுவலகங்களுக்கு மட்டும் உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இந்த உள்ளூா் விடுமுறை நாள், செலாவணி முறிச் சட்டத்தின்கீழ் வராது என்பதால் உள்ளூா் விடுமுறை அறிவிக்கும்போது மாவட்டத்தில் உள்ள கருவூலம், சாா்நிலைக் கருவூலகங்கள் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளா்களோடு செயல்படும். இதற்கு பதிலாக எதிா்வரும் செப்டம்பா் 11ஆம் தேதி (சனிக்கிழமை) முழு பணி நாளாக அறிவிக்கப்படுவதாகவும் ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.