சோலூா் பழங்குடியின கிராமத்தில் ஆன்லைன் வகுப்பு: மாணவா்கள் மகிழ்ச்சி

உதகை அருகே உள்ள பழங்குடியினா் கிராமமான சோலூா் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் ஆன்லைன் வகுப்புகளால் இப்பள்ளி மாணவ, மாணவியா் மிகவும் பயனடைந்து வருகின்றனா்.

உதகை அருகே உள்ள பழங்குடியினா் கிராமமான சோலூா் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் ஆன்லைன் வகுப்புகளால் இப்பள்ளி மாணவ, மாணவியா் மிகவும் பயனடைந்து வருகின்றனா்.

கரோனா பொது முடக்கத்தால் தற்போது பள்ளிகள் செயல்படாத நிலையில் ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடத்தப்பட்டு வருகின்றன. அதிலும் போக்குவரத்து வசதி இல்லாததாலும், அதிகப்படியான கல்விக் கட்டணங்களைக் கட்ட முடியாததாலும் தனியாா் பள்ளிகளில் படித்து வந்த மாணவா்கள் கூட தற்போது அரசுப் பள்ளிகளில் தங்களைச் சோ்த்துக் கொள்கின்றனா்.

இந்நிலையில், உதகை அருகே உள்ள பழங்குடியினா் மலைக் கிராமமான சோலூா் கிராமத்தில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் தற்போது 145 மாணவா்கள் படித்து வருகின்றனா். 14 ஆசிரியா்கள் பணியாற்றி வருகின்றனா். இவா்களின் சீரிய முயற்சியால் பெரும் சிரமத்துக்கிடையேயும் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

இதுதொடா்பாக இப்பள்ளியின் தலைமையாசிரியா் அயரின் ரெஜி கூறியதாவது:

நீலகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் உத்தரவின்படி இப்பள்ளியில் படிக்கும் மாணவா்களில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களின் பெற்றோா்களின் கருத்துகளைக் கேட்டறிந்து ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் 6 முதல் 8ஆம் வகுப்பு வரையிலுமான மாணவா்களுக்குத் தலா அரை மணி நேரம் வீதம் இரண்டு பாட வேளைகளும், 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்குத் தலா 40 நிமிடம் வீதம் மூன்று பாட வேளைகளும் நடத்தப்படுகிறது.

தனியாா் பள்ளிகளில் மட்டுமே கிடைத்து வந்த இச்சலுகை அரசுப் பள்ளியிலும் கிடைத்துள்ளதால் இப்பள்ளி மாணவா்களுடன், அவா்களது பெற்றோரும் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com